Dal Makhani வட இந்தியாவில் மிகவும் பிரபலமான அனைவரும் விரும்பும் ஒரு உணவு வகையாகும். இது உலக அளவில் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. பார்ப்பதற்கே மிகவும் அழகான கிரீமி அமைப்பு, மசாலா பொருட்களின் நறுமண கலவையுடன் இணைந்து சைவ உணவுப் பிரியர்களின் விருப்பமான தேர்வாக உள்ளது. இதை நம்முடைய வீட்டிலேயே எளிதாக செய்ய முடியும். இதை எப்படி செய்வதென இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து - 1 கப்
ராஜ்மா - ¼ கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 3
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ½ ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
Fresh கிரீம் - ½ கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்து மற்றும் ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். குறைந்தது 8 மணி நேரமாவது இவை தண்ணீரில் ஊற வேண்டும். இவை உரியதும் தண்ணீரை வடிகட்டி நன்கு கழுவுங்கள்.
பின்னர் குக்கரில் உளுந்து, ராஜ்மா மற்றும் தண்ணீர் சேர்த்து 6 முதல் 7 விசில்கள் விட்டு மென்மையாக வேக விடுங்கள். அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், சீரகத்தூள் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்குங்கள். பின்னர் தக்காளியை சேர்த்து அவை மென்மையாகும் வரை வேக விடவும். தக்காளியில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் தீயை குறைத்து, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடங்கள் மீண்டும் வேக விடுங்கள்.
வேக வைத்த உளுந்து மற்றும் ராஜ்மாவை ஸ்பூன் அல்லது மாஷரின் உதவியுடன் பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை வாணலியில் உள்ள மசாலா கலவையில் சேர்த்து, நன்றாகக் கிளறி 15 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.
இறுதியில் இவை கெட்டியான பதத்திற்கு வந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் பிரஷ் கிரீம் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்தால், சூப்பர் சுவையில் Dal Makhani தயார்.