சுவையா சுலபமா செய்யலாம் புடலை டிஷ் வகைகள்!

Snake Gourd variety dish...
Snake Gourd variety dish...
Published on

-பி.ஆர். லட்சுமி

புடலங்காய் கூட்டு

தேவையான பொருட்கள்:

·         புடலங்காய் சுத்தம் செய்து அறுத்தது இரண்டு கப்

·         கடலைப்பருப்பு அரை கப்

·         சின்ன வெங்காயம் கால் கப்

·         சோளம் வறுத்தது கால் கப்

·         அவல் வறுத்தது மூன்று ஸ்பூன்

·         முந்திரி பருப்பு வறுத்தது இரண்டு ஸ்பூன்

·         உப்பு ஒரு ஸ்பூன்

·         மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டியவை

 ·         தேங்காய் துருவியது கால் கப்

·         சீரகம் இரண்டு ஸ்பூன்

·         இஞ்சி சிறு துண்டு

·         பூண்டு பத்து பல்

·         கருவேப்பிலை ஒரு பிடி அளவு

·         முந்திரி 4

முதலில் மிக்ஸியில் மேற்கண்ட பொருட்களை போட்டு லேசாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் சிறிது நீரூற்றி நன்கு மைய அரைக்க வேண்டும்.  மிக்ஸி இல்லாதவர்கள் கல் அம்மியிலும் அரைக்கலாம். உரலிலும் ஆட்டி எடுத்துக் கொள்ளலாம்.

சுத்தம் செய்த புடலங்காயை நன்கு வேகவைக்க வேண்டும். கடலைப்பருப்பையும் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை கடுகு உளுந்து சேர்த்து தாளித்து வைத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் அரைத்த மசாலாவுடன் புடலங்காயையும், கடலைப்பருப்பையும் போட்டு நன்கு வேக விடவேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் வற்றல் நான்கு சேர்த்து அங்கே வேக விடவேண்டும் குக்கரில் இரண்டு விசில் சத்தம் வந்தவுடன் வறுத்து வைத்த  சோளம், அவல் முந்திரி பருப்பு வறுத்தது, உப்பு போட்டு, கொத்தமல்லி தழைகளை லேசாக மேலே தூவி இறக்க வேண்டும்.

புடலங்காய் இனிப்பு பர்ஃபி

புடலங்காயை ஒரு இன்ச் அளவிற்கு அறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.  முந்திரிப் பருப்பு கால் கப், பாதாம் பருப்பு, கால் கப், ஏலக்காய் 4, நாட்டு சக்கரை கால் கப் எடுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பேரிச்சம்பழம் சிறிதளவு கொட்டை இல்லாமல் எடுத்து இந்த முந்திரி பருப்பு கலவையுடன் கலந்து உருண்டையாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

புடலங்காயை குக்கரில் நன்றாக வேக விடவேண்டும் வேகவிட்ட பின் முந்திரி பருப்பு கலவையை புடலங்காய் வாய்க்குள் நன்றாக உள்ளே திணிக்க வேண்டும். மைதா மாவு சிறிதளவு எடுத்து நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும் கடலை மாவுடன் சேர்க்கும் கலந்து கொள்ளலாம். இரண்டு பக்கமும் புடலங்காயின் வாயை நன்கு மூடிய பின்  அரை லிட்டர் எண்ணையை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.  எண்ணெயில் புடலங்காயை போட்டு நன்கு சிவக்க எடுத்து வைக்க வேண்டும்.

புடலங்காய் உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு ஃப்ரை

புடலங்காயை ஒரு இன்ச் இடத்திற்கு சுத்தம் செய்த வைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் பிரியாணி மசாலா பொடி நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும் தேவைப்படும் உப்பையும் அதனுடன் சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் எல்லாவற்றையும் நன்கு அடிப்பிடிக்காமல் வாணலியில் கொட்டி கிளறி வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த புடலங்காயுடன் உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து இரண்டு பக்கமும் மைதா மாவு ரெடி கலந்த கலவையை அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

இதையும் படியுங்கள்:
உங்கள் மனசாட்சியை புறக்கணிக்காதீர்கள்!
Snake Gourd variety dish...

கடலை மாவு ரஸ்க் பவுடர் மைதா மாவு கலந்து பஜ்ஜி  மாவைத் தயார் செய்து கொள்ள வேண்டும் அதில் அடைத்து வைத்த உருளைக்கிழங்கு புடலங்காயை போட்டு ஒரு பிரட்டு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும் அரை லிட்டர் எண்ணெயை வாணலியில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கின்றபோது தயார் செய்து வைத்த உருளைக்கிழங்கு புடலங்காயை அதில் போட்டு எடுக்க வேண்டும். நன்கு சிவக்க வந்தவுடன் எடுத்து பரிமாறலாம். இதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் வெள்ளரிக்காய் பொருத்தமானதாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com