சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபிக்கள்!

கொள்ளு இனிப்பு உருண்டை!
கொள்ளு இனிப்பு உருண்டை! www.betterbutter.in

கொள்ளு இனிப்பு உருண்டை!

தேவையானவை:

பொருள் - அளவு

கொள்ளு ஒரு கப்

பொடித்த வெல்லம் முக்கால் கப்

ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்

தேங்காய் துருவல் கால் கப்

நெய் சிறிதளவு

செய்முறை :

வாணலியில் நெய் விட்டு கொள்ளு பருப்பை லேசாக வறுத்து எடுத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

அதன் பிறகு, நீரை நன்கு வடித்து பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி, சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான கொள்ளு இனிப்பு உருண்டை தயார்.

வாழைத்தண்டு கூட்டு!

வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு கூட்டுwww.desicookingrecipes.com

தேவையானவை:

பொருள் - அளவு

வாழைத்தண்டு ஒரு துண்டு

பாசிப்பருப்பு அரை கப்

சின்ன வெங்காயம் 8

பச்சை மிளகாய் 2

சீரகம் அரை டீஸ்பூன்

பச்சை வேர்க்கடலை கால் கப்

கறிவேப்பிலை 2 கொத்து

நெய், பால் சிறிதளவு

உப்பு தேவையான அளவு.

செய்முறை:

வாழைத்தண்டை நாரெடுத்து மிகவும் மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை மலர வேகவிடவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
பிரியாணி சாய் தெரியுமா?
கொள்ளு இனிப்பு உருண்டை!

மண் சட்டியில் அல்லது அடி கனமான வாணலியில் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நறுக்கிய வாழைத்தண்டு, வேக வைத்த பச்சை வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் நெய்யில் வறுத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பால் கலந்து பரிமாறவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com