பிரியாணி சாய் தெரியுமா?

Do you know Biryani Chai?
Do you know Biryani Chai?https://cookpad.com
Published on

டீ என்பது உலகின் பலதரப்பட்ட மக்களாலும் காலை, மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் விரும்பி அருந்தக்கூடிய ஒரு பானம். இதன் சுவைக்கும் மணத்துக்கும் மயங்காதவர் எவருமில்லை என்றே கூறலாம். டீ பிரியர்களுக்காகவே நாளடைவில் இஞ்சி டீ, மசாலா டீ, மூலிகை டீ, க்ரீன் டீ என பல வகைகளில் இதன் தயாரிப்புகள் முன்னேற்றம் கண்டது. அவற்றுள் சமீப காலத்தில் அறிமுகமாகி ட்ரெண்டிங்கில் உள்ள, 'பிரியாணி டீ' பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

இஞ்சி, தேன், லெமன் ஜூஸ், புதினா, கருப்பு மிளகு, பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், ஸ்டார் அனிஸ் மற்றும் டீ இலைகள் சேர்த்து தயாரிக்கப்படுவது பிரியாணி டீ. இந்த டீயிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் ஏராளம். இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தொற்றுக்களின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது. தலைவலி, காய்ச்சல், சளி ஆகியவற்றை குணப்படுத்தி உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.

இரத்தத்தை சுத்திகரிக்கவும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்கிறது. அழற்சி, உப்புசம், வலி போன்ற ஜீரண மண்டல கோளாறுகளை நீக்கி, சுலபமான செரிமானத்துக்கு உதவுகிறது. உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, நச்சுக்களை நீங்குகிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. புற்றுநோய் செல்கள் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களின் பரவலைத் தடுத்து நிறுத்துகிறது. இந்த டீயில் சேர்க்கப்படும் கூட்டுப் பொருட்களில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் பல நன்மைகள் தரவல்லதாய் இருப்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மலபார் கீரையின் மலைக்க வைக்கும் நன்மைகள்!
Do you know Biryani Chai?

பிரியாணி டீ தயாரிக்கும் முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து அடுப்பில் வைக்கவும். அதில் நசுக்கிய மிளகு, பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், ஸ்டார் அனிஸ் ஆகியவற்றை சேர்த்து ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். இதனால் ஸ்பைஸஸ்களிலிருக்கும் மணமும் சுவையும் நீரில் நன்கு இறங்கிவிடும். பின் டீ இலைகளை அதில் சேர்த்து, பொங்கிவரும்போது இறக்கி, தட்டு போட்டு மூடிவிடவும்.

அதேநேரம் இஞ்சி துண்டுகளை நசுக்கி ஒரு கப்பில் போடவும். அதன் மீது சிறிது தேன் சேர்க்கவும். பின் லெமன் ஜூஸ் பிழியவும். ஃபிரஷ் புதினா இலைகள் சேர்க்கவும். பிறகு கொதிக்க வைத்த டீ டிக்காஷனை வடிகட்டி கப்பில் ஊற்றவும். இப்போது ஆரோக்கியமும் மணமும் நிறைந்த பிரியாணி டீ சுவைக்கத் தயார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com