சுவையான தேங்காய் பால் அல்வா செய்யலாம் வாங்க! 

Delicious coconut milk alva.
Delicious coconut milk alva.

தீபாவளி வேறு நெருங்கிவிட்டது. இனி கொஞ்சம் கொஞ்சமாக தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம் என்று குழப்பத்தில் அனைவரும் திண்டாடிக் கொண்டிருப்பீர்கள். ஒருவருக்கு பிடித்த பலகாரம் மற்றொருவருக்கு பிடிக்காது. அதேபோல ஒருவருக்கு செய்ய முடிந்த உணவு மற்றொருவருக்கு செய்ய தெரியாது என்று பல பிரச்சினைகள் இதில் உள்ளது. இருப்பினும் தீபாவளி பண்டிகைக்கு சில பலகாரங்களை நாம் கட்டாயம் செய்துதான் ஆக வேண்டும். 

அப்படி இந்த தீபாவளிக்கு சுவையான தேங்காய்ப்பால் அல்வா செய்து பாருங்கள். 

தேவையான பொருட்கள்: 

தேங்காய் - துருவியது 1 கப்

தேங்காய் பல் - 1 ஸ்பூன் 

கான்ப்ளோர் - 1 ஸ்பூன் 

வெல்லம் - ½ கப்

முந்திரி - 15

ஏலக்காய் பொடி - சிறிதளவு

நெய் - 2 ஸ்பூன் 

தண்ணீர் - ¼ கப்

செய்முறை: 

முதலில் ஒரு கப் துருவிய தேங்காயிலிருந்து தேங்காய் பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரி, தேங்காய் பல் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 

பின்னர் அதே கடாயில் தேங்காய் பாலை ஊற்றி நன்றாகக் கிளறிக் கொண்டே இருந்தால், தேங்காய் பால் கெட்டியாக மாறி வரும். அப்போது அதில் வெல்லம் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். வெல்லம் சேர்த்ததும் கெட்டியான பதம் இலகிவிடும் என்பதால், கான்ப்ளோர் மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்க வேண்டும். சேர்த்ததும் கெட்டியான பதம் கிடைத்து விடும். இதைத் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா பதத்திற்கு வந்துவிடும். 

இது முற்றிலும் வித்தியாசமான அல்வா.  இது செய்வதற்கு நேரமும் குறைவுதான் என்பதால் வீட்டிலேயே எளிதாக செய்துவிடலாம். இதில் வெல்லத்திற்கு பதில் நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரை எது வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால் வெல்லம் சேர்த்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.

இறுதியில் அல்வா நன்றாக திரண்டு வந்ததும் வருத்த முந்திரி, ஏலக்காய் பொடி, தேங்காய் அனைத்தையும் தூவி இறக்கினால் சூடான சுவையான தேங்காய் பால் அல்வா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com