
அன்றாடம் நாம் செய்யும் சமையலில் சில பொருட்களை சேர்க்க சுவை கூடுவதுடன் ஆரோக்கியமும் மேம்படும்.
வாழைக்காய் வறுவல் பொரியல் என செய்யும்போது பெருஞ்சீரகப்பொடி சேர்த்துக்கொள்ள வாயுப்பிடிப்பு வராது.
வற்றல் குழம்பு செய்யும்போது இறக்கும்போது வற்றல் களை பொரித்து போட்டு இறக்க சுவை நன்றாக இருக்கும்.
பாகற்காயை மெல்லியதாக சிப்ஸ் கட்டரில் சீவி எண்ணையில் பொரித்து எடுத்து மிளகாய்த்தூள், உப்பு, ஆம்ச்சூர் பொடி, கருவேப்பிலை போட்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கசப்பு தெரியாததால் விரும்பி சாப்பிடுவர்.
எந்தவித சுண்டல் வேகவிடும் போது உப்பு சேர்த்து நன்கு வேக விட்டு வழக்கமான தாளிப்பு செய்து காய்கறி துருவல்,தே துருவல், கருவேப்பிலை,மல்லி கலந்து கொடுக்க சுவையாக இருக்கும்.
மோதகம் செய்யும்போதும் ஒரே விதமாக பருப்பு பூரணமாக செய்யாமல் வறுத்துபொடித்த வேர்க்கடலை+ எள்பூரணம் ,நட்ஸ்பால்கோவா வைத்து பூரணம்,முளைக்கட்டிய பாசிப்பயறை ஆவியில் வேக வைத்து கொரகொரப்பாக உப்பு,ப மிளகாய், கொத்தமல்லி கட் பண்ணி சேர்த்ததை வைத்து பூரணம்செய்து வேகவிட்டு எடுக்கவும். சத்தோடு, சுவையும் கொண்ட மோதகம் சுவையில் அசத்தும்.
பூஜைக்கு பொரி படைக்கும் போது எல்லாவற்றிலும் வெல்லம், அவல், பொட்டுக்கடலை சேர்க்காமல் நடுவில் கலந்து வைத்து பூஜை செய்ய,மற்றதை கார பொரியாகவோ, மசாலாப் பொரியாகவோ செய்து கொள்ளலாம்.
பூஜைக்கு நம் வழக்கமான சமையல் பாத்திரத்தில் செய்வதைவிட விரத நாட்களுக்கென மண் பாத்திரங்களை உபயோகிக்க சுவையோடு, சுத்தமும் சேரும்.
குழம்பு தூள் அரைக்கும்போது வழக்கமான மிளகாயோடு, காஷ்மீரி மிளகாய் 100சேர்த்து அரைக்க குழம்பு, கறி செய்யும்போது நல்ல சிவந்த நிறத்தில் காரம் அதிகமின்றி வாசனையாக இருக்கும்.
சமையலுக்கு ஒரேவிதமான எண்ணையை விட இரண்டு, மூன்று எண்ணெய் வகைகளை வாங்கிக்கொண்டு ஒரு சின்ன கிண்ணத்தில் அவற்றை சமமாக கலந்து கொண்டு சமைக்கும் போது உபயோகிக்க தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் வேகவிடும்போது உப்பு சேர்த்து தாளித்து இஞ்சி, பனீர் துருவல்,அல்லது சோயா துருவல் என தூவி கிளறி பரிமாற சுவையாக இருக்கும்.
இனிப்புக்கு சர்க்கரை சேர்த்து செய்வதை விட பிரௌன் சுகர், இயற்கை முறையில் தயாரித்ததை சேர்த்து செய்ய சுவை நன்றாக இருக்கும்.
இவை அனைத்தும் நான் வீட்டில் செய்து கொடுத்து சுவைப்பதுதான்.