வறுக்காமல் பொரிக்காமல் ருசியான மாலை நேர டிபன் வகைகள் இதோ!

அவல் இனிப்பு உப்புமா
அவல் இனிப்பு உப்புமா

டுப்பே தேவை இல்லாத ருசியான மாலை டிபன் வகைகள் சில. இதற்கு வறுக்க வேண்டாம், பொரிக்க வேண்டாம், வேகவைக்க வேண்டாம். இந்த டிபன் வகைகளை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

அவல் இனிப்பு உப்புமா:

மெல்லிய அவல் ஒரு கப் 

தேங்காய் துருவல் கால் கப்

பொடித்தவெல்லம் அரை கப்

முந்திரிப் பருப்பு 5

திராட்சை 10 

ஏலப்பொடி 1/4 ஸ்பூன்

அவலை களைந்து பத்து நிமிடம் ஊற விட்டு நீரை வடித்து அதில் தேங்காய் துருவல் கொடுத்த வெள்ளம் முந்திரிப்பருப்பு திராட்சை ஏல பொடி ஆகியவற்றை கலந்து பரிமாறவும்.

அவல் கார உப்புமா:

மெல்லிய அவல் ஒரு கப் 

வேர்க்கடலை ஒரு கைப்பிடி

தேங்காய் துருவல் கால் கப் 

உப்பு தேவையானது பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்

மிளகு பொடி அரை ஸ்பூன் 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்1  அதிகம் புளிப்பில்லாத தயிர் 1/4 கப், கொத்தமல்லி சிறிது.

அவல் கார உப்புமா
அவல் கார உப்புமா

அவலை களைந்து பத்து நிமிடம் ஊற விட்டு நீரை வடித்து பிரஷ்ஷான தேங்காய் துருவல், உப்பு, பெருங்காய பொடி, மிளகு பொடி,பொடியா நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை,தயிர் சேர்த்து கலந்து பரிமாறவும். 

இதையும் படியுங்கள்:
மகரவிளக்கு பூஜை: சபரிமலை நடை திறப்பு எப்போது தெரியுமா?
அவல் இனிப்பு உப்புமா

முத்து சுண்டல்:

சோள முத்துக்கள் ஒரு கப் 

மாங்காய் துண்டுகள் ஒரு ஸ்பூன் தேங்காய் பல் 2 ஸ்பூன்

வெள்ளரி துண்டுகள் கால் கப் 

கேரட் துருவல் கால் கப் 

உப்பு சிறிது 

எலுமிச்சம் பழச்சாறு அரை மூடி

கொத்தமல்லி சிறிது

முத்து சுண்டல்
முத்து சுண்டல்

ஸ்வீட் கார்ன், பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகள், தேங்காய் துருவல், அத்துடன் தேவையான உப்பு, எலுமிச்சம்பழம் சாறு சிறிது,  பொடியாக நறுக்கிய  கொத்தமல்லி சேர்த்து கலந்து சாப்பிட ருசியான, சத்தான சுண்டல் தயார்.

முளைகட்டிய பயறு சாலட்:

பச்சைபயிறு முறை கட்டியது 1/2 கப்

முளைகட்டிய காராமணி 1/2 கப்

முளை கட்டிய கருப்பு கொண்டை கடலை 1/2 கப்்

பச்சை வேர்க்கடலை 1/4 கப் வெங்காயம் 1/4 கப் 

உப்பு தேவையானது 

இஞ்சித் துருவல் ஒரு ஸ்பூன் 

கேரட் துருவல் 2 ஸ்பூன் 

மிளகுத்தூள் (அ) காரப்பொடி 1/2 ஸ்பூன் 

எலுமிச்சம் பழச்சாறு 1 மூடி

கொத்தமல்லி சிறிது

முளைகட்டிய பயறு சாலட்
முளைகட்டிய பயறு சாலட்

புரோட்டின் சத்து மிகுந்த பயறு வகைகளை முளைகட்டி அத்துடன் வேர்க்கடலை ,பொடியாக நறுக்கிய வெங்காயம் ,இஞ்சி, கேரட் துருவல், மிளகுத்தூள், உப்பு,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து கலந்து சாப்பிட மிகவும் சத்தான மாலை உணவு ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com