கோல்ட் காபியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், 1840 க்கு செல்ல வேண்டும். முதல் ஐஸ் காபியான ’மஸக்ரான்’ அல்ஜீரியாவில் தயார் செய்யப்பட்டது. காபி பிரியர்களுக்கு கோல்ட் காபி ஒரு வரபிரசாதமாகும். இந்த கோடைகாலத்தில் ஜில்ன்னு ஐஸ் போட்டு கோல்ட் காபி செஞ்சு வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்க. இப்போ வாங்க கோல்ட் காபி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
கோல்ட் காபி செய்ய தேவையான பொருட்கள்:
காபி பவுடர்- 2 தேக்கரண்டி.
சாக்லேட் சிரப்- 2 தேக்கரண்டி.
பால்-1 கப்.
சக்கரை-3 தேக்கரண்டி.
ஐஸ்கிரீம்-தேவையான அளவு.
கோல்ட் காபி செய்முறை விளக்கம்:
முதலில் 2 தேக்கரண்டி காபி தூளை எடுத்து கொண்டு 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். பாலை காய்ச்சி பிரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு எடுத்துக்கொள்ளவும்.
இப்போ மிக்ஸியில் 1 கப் பால், கலந்து வைச்சிருக்க காபி, 2 தேக்கரண்டி சாக்லேட் சிரப், சக்கரை 3 தேக்கரண்டி, ஐஸ் கட்டிகள் தேவையான அளவு சேர்த்து நன்றாக பீட் செய்து எடுத்து கொள்ளவும்.
இப்போது ஒரு கண்ணாடி தம்ளரில் சாக்லேட் சிரப்பை ஓரங்களில் அழகுக்காக சேர்த்து அதில் செய்து வைத்திருக்கும் கோல்ட் காபியை ஊற்றி பரிமாறவும். வேண்டுமென்றால் சாக்லேட் ஐஸ்கிரீமையும் அதன் மீது வைத்து பரிமாறலாம் நன்றாக இருக்கும். இந்த கோடை வெயிலுக்கு காபியை இப்படி ஜில்லுன்னு செஞ்சு குடிச்சுப்பாருங்க செம டேஸ்டியா இருக்கும். கண்டிப்பா வீட்டிலயும் ட்ரை பண்ணிப் பாருங்க.