
நேந்திரம் பழ ஜாம்
தேவை:
கனிந்த நேந்திர வாழைப்பழம் - 5
வெல்லத்தூள் - 1 கப்
நெய் - 3 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன் கறிவேப்பிலை பேரிச்சம்பழம் - 8
தேன் - 5 ஸ்பூன்
செய்முறை:
நேந்திரம் பழங்களை நீராவியில் வேக வைத்து, தோல் நீக்கி மசித்து வைக்கவும். வெல்லத் தோலை சிறிது நீர் விட்டு, சூடாக்கி வடிகட்டவும். பிறகு பாகு காய்ச்சி பழ மசியலை போட்டு நெய் ஊற்றிக் கிளறவும். பேரிச்சம் பழங்களை கொட்டை நீக்கி துண்டுகளாக்கி சேர்க்கவும். ஜாம் பதம் வந்ததும், இறக்கி தேன் கலக்கவும். சுவையான நேந்திரம் பழ ஜாம் ரெடி.
அரி நெல்லிக்காய் ஜாம்
தேவை:
அரி நெல்லிக்காய் - 3 கப்
சர்க்கரை - 3 கப்
தேன் - 3 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
செய்முறை:
நெல்லிக்காய்களைக் கழுவி, நீராவியில் வேக வைத்து, கொட்டைகள் நீக்கி மசிக்கவும். சர்க்கரையை சிறிது நீர் விட்டு பாகு காய்ச்சவும். கொதித்து வரும்போது, நெல்லிக்காய் மசியலை சேர்த்துக் கிளறி, ஜாம் பதம் வந்ததும் இறக்கி வைத்து, குங்குமப்பூ, தேன் கலந்து வைக்கவும். நாவிற்கு இனிய அரி நெல்லிக்காய் ஜாம் தயார்.
தக்காளி ஜாம்
தேவை:
தக்காளி - கால் கிலோ
சர்க்கரை - 2 டம்ளர்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
தேன் - அரை கப்
கிஸ்மிஸ் - அரை கப்
அத்திப்பழத் துண்டுகள் - அரை கப்
செய்முறை:
தக்காளியை நறுக்கி, அது மூழ்கும் அளவு நீர் கலந்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் எடுத்து ஆறியதும் மேல் தோலை நீக்கி, கசக்கி, விதைகளை எடுக்கவும். சர்க்கரை, தக்காளி சாறு இரண்டையும் கொதிக்க வைத்து, நீர் சுண்டி இளகிய பதம் வந்ததும், இறக்கி ஆறவிடவும். அதில் ஏலக்காய்தூள், குங்குமப்பூ, தேன், கிஸ்மிஸ் பழங்கள், அத்திப்பழத் துண்டுகள் எல்லாவற்றையும் சேர்க்கவும். சுவையான, சத்தான தக்காளி ஜாம் தயார்.
ரஸ்தாளி பழ ஜாம்
தேவை:
ரஸ்தாளி வாழைப்பழம் – 8
சர்க்கரை - 1 கப்
இஞ்சி துருவல் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
செய்முறை:
ரஸ்தாளி வாழைப்பழங்களை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும். இஞ்சித் துருவலை சேர்க்கவும். 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, நறுக்கிய பழங்களை வேகவைத்து, மசிக்கவும். சர்க்கரைய கம்பி பதத்தில் பாகு காய்ச்சி,
பழ மசியலை சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியானதும், எலுமிச்சை சாறு, ஏலக்காய் தூள், குங்குமப்பூ கலந்து கிளறி இறக்கி வைக்கவும். இது பிரெட், பன், பூரி, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.