
ஸ்வீட் பொட்டேட்டோ கோகோநட் கேக் செய்முறை;
தேவையான பொருட்கள்:
1.ஸ்வீட் பொட்டேட்டோ 750 கிராம்
2.வெண்ணெய் ⅓ கப்
3.சர்க்கரை ½ கப்
4.பட்டை (Cinnamon) பவுடர் ½ டீஸ்பூன்
5.உப்பு 6 கிராம்
6.மக்காச் சோள மாவு 1 டேபிள் ஸ்பூன்
7.தேங்காய்த் துருவல் 60 கிராம்
8.முட்டை 3
செய்முறை:
ஸ்வீட் பொட்டேட்டோவை தோல் சீவி நறுக்கி தண்ணீரில் போட்டு பதினைந்து நிமிடங்கள் நன்கு வேகவைத்து எடுக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பவுடர் பண்ணிக்கொள்ளவும். ஸ்வீட் பொட்டேட்டோ நன்கு ஆறியவுடன், ஒரு பௌலில் போட்டு நன்கு மசிக்கவும்.
அதனுடன் வெண்ணெய்யை சேர்த்து மசித்துக் கலக்கவும். பின் பொடித்த சர்க்கரை, பட்டை பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். அதன் பின் மக்காச்சோள மாவையும் துருவிய தேங்காயையும் சேர்த்து நன்கு ஒரு சேர கலந்துவிடவும். முட்டைகளை மிக்ஸியில் போட்டு நுரைக்க அடித்து (beat) பௌலில் உள்ள கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின் ஒரு வெண்ணெய் தடவிய ட்ரேயில் கலந்து வைத்த மாவை கொட்டி சமப்படுத்தவும். பின் ஓவனை 177°செல்ஸியஸ் சூடு பண்ணி அதில் ட்ரேயை வைத்து 45 நிமிடங்கள் வேகவிடவும். பின் வெளியில் எடுத்து ஆறிய பின் வெட்டி துண்டுகளாக்கவும்.