சூப்பரான சுவையில் பைனாப்பிள் ஜாம் வீட்டிலேயே செய்யலாமே! 

Pineapple Jam
Homemade Pineapple Jam Recipe

அன்னாசிப்பழம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு சிறந்த பழமாகும். இதைப் பயன்படுத்தி எப்படி ஜாம் செய்வது என்பதைத்தான் இப்ப பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த ஜாம் செய்வது மிகவும் சுலபம். ஒருமுறை தயாரித்து சுமார் நான்கு வாரங்கள் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். தோசை சப்பாத்தி பிரட் போன்றவற்றில் தொட்டு சாப்பிட வேற லெவல் சுவையில் இருக்கும். நீங்கள் கடைகளில் தேவையில்லாத ரசாயனங்கள் கலக்கப்பட்ட ஜேமை வாங்கி சாப்பிடுகிறீர்கள் என்றால், ஒருமுறை இதை வீட்டிலேயே செய்து முயற்சித்துப் பாருங்கள். 

தேவையான பொருட்கள்: 

  • 2 சிறிய அளவு பைனாப்பிள்கள்

  • 2 கப் சர்க்கரை 

  • 1 ஸ்பூன் லெமன் ஜூஸ் 

  • விருப்பப்பட்டால் 1 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். 

செய்முறை: 

முதலில் நன்கு பழுத்த அன்னாசிப் பழத்தை தேர்ந்தெடுத்து, அதன் மேலே உள்ள செதிலாகளை சீவிக் கொள்ளவும். பின்னர் அண்ணாசி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளுங்கள். இது அதிகம் நீர்த்துப் போயிருந்தால், கொஞ்சம் ஜூசை வடிகட்டி எடுத்து விடலாம். 

இப்போது அரைத்த அண்ணாசி பழத்தை ஒரு வாணலியில் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். பின்னர் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். எலுமிச்சை சாறு அன்னாசிப் பழத்தின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, விரைவில் ஜாம் கெட்டுப்போகாமல் இருக்க உதவும். 

இந்த கலவை நல்ல கெட்டியான பதத்திற்கு வரும்வரை மிதமான தீயில் சுமார் அரை மணி நேரம் அப்படியே வேக விடுங்கள். இப்போது ஜாம் சரியான பதத்திற்கு வந்துவிட்டதா என்பதைப் பரிசோதிக்க, கொஞ்சமாக ஜாமை எடுத்து தண்ணீரில் போட்டுப் பார்க்கவும். அப்படி செய்யும்போது ஜாம் கரையவில்லை என்றால் சரியான பதத்திற்கு வந்துவிட்டது என அர்த்தம். 

இதையும் படியுங்கள்:
இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கல்லீரல் காலி... ஜாக்கிரதை!
Pineapple Jam

இறுதியாக ஜாம் தயாரானதும் அதை நன்கு காய்ந்த கண்ணாடி பாட்டிலில் அடைத்து பயன்படுத்தினால் நான்கு வாரங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த ஜாமில் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப மசாலா பொருட்கள் அல்லது நட்ஸ் பயன்படுத்தியும் சேமிக்கலாம். இது ஜாமுக்கு கூடுதல் நறுமணம் மற்றும் சுவையைக் கொடுக்கும். 

இன்றே இந்த ஜாம் ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com