இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் கல்லீரல் காலி... ஜாக்கிரதை!

 Liver
Foods That Ruin Your Liver

உங்கள் ரத்தத்திலிருந்து நச்சுக்களை வடிகட்டுவதற்கும், செரிமானத்திற்கு உதவுவதற்கும் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேமிப்பதற்கும் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். இருப்பினும் சில உணவுகள் உங்கள் கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் செயல்பாட்டைத் தடுக்கலாம். இந்தப் பதிவில் கல்லீரல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் சில உணவுகள் பற்றி பார்க்கலாம்.

மது: அதிகப்படியாக மது அருந்துவது கல்லீரல் பாதிப்பிற்கு முக்கிய காரணமாகும். அதிகப்படியான ஆல்கஹால் கல்லீரல் உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, வீக்கம் கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் சிரோசிஸ் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். எனவே உங்களது கல்லீரலை பாதுகாக்க ஆல்கஹாலைத் தவிர்ப்பது நல்லது. 

சர்க்கரை பானங்கள்: சர்க்கரை அதிகமாக கலக்கப்பட்ட சோடா மற்றும் குளிர்பானங்கள் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். அவற்றில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாகப் படிந்து காலப்போக்கில் வீக்கம் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே சர்க்கரை பானங்களுக்கு பதிலாக தண்ணீர், மூலிகை தேநீர், பழச்சாறு போன்றவற்றைப் பருகவும். 

அதிக கொழுப்புள்ள உணவுகள்: எண்ணெயில் அதிகம் வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த உணவை உட்கொள்வது, கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தை அதிகரிக்கும். இந்த ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கல்லீரலில் குவிந்து கல்லீரலை சேதப்படுத்தும். எனவே ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த அவகாடோ பழம், நட்ஸ் மற்றும் விதைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும். 

அதிக உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்: அதிகப்படியான உப்பு சேர்த்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் கல்லீரல் பாதிக்கப்படும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் அதிக சோடியம் மற்றும் ஆரோக்கியமற்ற பொருட்கள் இருப்பதால், உங்களது உடலில் அதிக திரவத்தை தேக்கி கல்லீரல் அழற்சிக்கு வழிவகுக்கும். இத்தகைய மோசமான உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியம். 

இதையும் படியுங்கள்:
உங்க முகம் அடிக்கடி சிவந்து போகுதா? அச்சச்சோ!
 Liver

இந்த உணவுகள் கல்லீரல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவற்றை மிதமாக உட்கொள்வது எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. அதேநேரம் தொடர்ச்சியாக இவற்றை உட்கொண்டு வந்தால் நீண்டகால அடிப்படையில் கல்லீரல் சேதத்திற்கு வழிவகுக்கும். எனவே, உங்களது கல்லீரல் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்க காய்கறிகள், பழங்கள், புரதங்கள் நிறைந்த சீரான உணவுக்கு முன்னுரிமை கொடுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com