சுவையான ஹனிகேக் மற்றும் ராகிமால்ட் கேக் வகைகள்!

Delicious Honeycake and Raagi Malt Cakes!
tasty cake recipes
Published on

ஹனிகேக்

தேவை:

மில்க்மெய்ட் _1டின்

பொடித்த சர்க்கரை _75 கிராம்

வெண்ணெய் _125 கிராம்

மைதா     _125 கிராம்

பேக்கிங்பவுடர்  _2 ஸ்பூன்

பேக்கிங்சோடா  _ 1 ஸ்பூன்

சூடானபால்   _2 கப்

வெனிலாஎசன்ஸ் _2 ஸ்பூன்

சுகர்சிரப் செய்ய:

சர்க்கரை _1/2 கப்

தண்ணீர் _1/4 கப்

ரோஸ்எசன்ஸ் _1 துளி

ஜாம்சாஸ் செய்ய:

 மிக்ஸ்ட்ப்ரூட் ஜாம் _75 கிராம்

வெதுவெதுப்பான நீர் _3 ஸ்பூன்

செய்முறை:

வெண்ணெயுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கலக்கி மில்க்மெய்ட் சேர்த்து அடித்து கலக்கவும். மூன்றும் சேர்ந்த கலவையை கிரீமியான பதத்திற்கு வரும் வரை 10 நிமிடங்கள் அடித்து கலக்கவும். பின் மைதாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங்சோடா சேர்த்து சலித்து கொள்ளவும். பின் மைதா கலவையை சிறிது சிறிதாக தூவி நன்கு கலக்கவும். இடையிடையே சூடான பால் சேர்த்து நன்கு கலந்து பின்னர் வெண்ணெய் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் மாவை ஊற்றவும் பின் நன்கு எல்லா பக்கமும் தட்டி கொள்ளவும்

பின்னர் 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 15 நிமிடங்கள் வரை சூடான ஓவனில் வைத்து 35 முதல் 40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். பின் 10 நிமிடங்கள் கழித்து ட்ரேயில் இருந்து கவிழ்த்து அரை மணி நேரம் வரை ஆற விடவும். பிறகு கேக் முழுவதும் குச்சியால் துளை போடவும்.

சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும். பின் இறக்கி ரோஸ்எசன்ஸ் கலந்து ஆற விட்டால் சுகர்சிரப் ரெடி. பிறகு சிறிது சிறிதாக கேக் மேல் ஊற்றவும். ஜாம் உடன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து ஜாம் கரையும் வரை கொதிக்க வைத்து இறக்கி இளஞ் சூட்டில் கேக் மேல் ஊற்றவும். பின் 1 மணி நேரம் வரை செட் ஆக விடவும். சுவையான, ஆரோக்கியமான ஹனிகேக் ரெடி.

ராகிமால்ட் கேக்

தேவை:

முட்டை  _3

கேக்ஜெல்_1 ஸ்பூன்

வெனிலாஎசன்ஸ் _1 ஸ்பூன்

சர்க்கரை  _150 கிராம்

சன்ப்ளவர் ஆயில் _1/4 கப்

ராகிமால்ட் _100 கிராம்

மைதா  _50 கிராம்

பேக்கிங்பவுடர் _1 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
தீபாவளி பட்சணம் எளிய டிப்ஸ் வகைகள்!
Delicious Honeycake and Raagi Malt Cakes!

செய்முறை:

ராகிமால்ட் உடன் மைதா, பேக்கிங்பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் கேக்ஜெல் வெனிலாஎசன்ஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். பின் இதனுடன் ஆயில் சேர்த்து நன்கு ஸ்மூத்தாக அரைத்து எடுக்கவும். பின் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் சலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். மிகவும் கெட்டியாக இருந்தால் மட்டுமே 2 ஸ்பூன் அளவில் பால் சேர்க்கவும். இட்லி மாவு பதத்தில் கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்.

பின்னர் பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் மாவை ஊற்றவும் பின் ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடாக்கவும். சூடான ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 35_40 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.  ஒரு டூத் பிக் வைத்து நடுவில் குத்தி பார்த்து வெந்ததும் எடுக்கவும். 5 நிமிடம் கழித்து ட்ரேயில் இருந்து கவிழ்த்து பட்டர் பேப்பர் மெதுவாக நீக்கவும். பின் ஒரு மணி நேரம் வரை நன்கு ஆறவிட்டு கட் செய்யவும். சுவையான, ஆரோக்கியமான, மணமான ராகிமால்ட் கேக் ரெடி.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com