Karaikal kattu soru with chammanthi chutney recipes
Karaikal kattu soru with chammanthi chutney recipesImage Credits: YouTube

சுவையான காரைக்கால் கட்டுச்சோறு வித் சம்மந்தி சட்னி ரெசிபிஸ்!

Published on

ன்றைக்கு காரைக்கால் பக்கம் மிகவும் பிரபலமான கட்டுச்சோறும் அதனுடன் தொட்டுக் கொள்வதற்கு சம்மந்தி சட்னியும் வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

காரைக்கால் கட்டுச்சோறு செய்ய தேவையான பொருட்கள்;

எண்ணெய்-1 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

பூண்டு-5

வெங்காயம்-1

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகு தூள்-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

சீரகத்தூள்-1 தேக்கரண்டி.

புளி தண்ணீர்-1 கப்.

தேங்காய் பால்-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

அரிசி-1கப்.

காரைக்கால் கட்டுச்சோறு செய்முறை விளக்கம்;

முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு பூண்டு 4 இடித்து சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி எடுத்துக்கொள்ளலாம். இத்துடன் மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகுத்தூள் 1 தேக்கரண்டி, சீரகத்தூள் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து விட்டு 1 கப் புளி தண்ணீர், 1 கப் தேங்காய்ப் பால் சேர்க்க வேண்டும். இதற்கு தேவையான உப்பு, சேர்த்து நன்றாக கொதி வந்ததும் ஊறவைத்த அரிசி 1 கப் சேர்த்துக்கொள்ளவும். இதை மூடிப்போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான காரைக்கால் ஸ்பெஷல் கட்டுச்சோறு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

சம்மந்தி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் -1 கப்.

வரமிளகாய்-2

புளி- எழுமிச்சைப்பழ அளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

உப்பு- தேவையான அளவு.

சட்னி தாளிக்க,

தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

சின்ன வெங்காயம்-5.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

இதையும் படியுங்கள்:
திருப்பதி தேவஸ்தான புளியோதரை மற்றும் தர்மபுரி மிளகாய் வடை செய்யலாமா?
Karaikal kattu soru with chammanthi chutney recipes

சம்மந்தி சட்னி செய்முறை விளக்கம்;

முதலில் மிக்ஸியில் துருவிய தேங்காய் 1கப், வரமிளகாய் 2, புளி எழுமிச்சைப்பழ அளவு, கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் 1 தேக்கரண்டி கடுகு, கருவேப்பிலை சிறிதளவு, வரமிளகாய் 2, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 5, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கியதும் அரைத்த தேங்காயை இத்துடன் சேர்த்து கலந்துவிட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இந்த சட்னியை தோசை, இட்லிக்கு வைத்து சாப்பிட்டால், அல்டிமேட் டேஸ்டாக இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்க.

logo
Kalki Online
kalkionline.com