திருப்பதி தேவஸ்தான புளியோதரை மற்றும் தர்மபுரி மிளகாய் வடை செய்யலாமா?

Puliyodharai and milagai vadai Recipes
Puliyodharai and milagai vadai RecipesImage Credits: YouTube.com
Published on

ன்றைக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் அதே சுவையிலான புளியோதரையும் மற்றும் தர்மபுரி ஸ்பெஷல் மிளகாய் வடையையும் சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.

திருப்பதி தேவஸ்தான புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்;

பொடி செய்வதற்கு,

கடலைப் பருப்பு-1 தேக்கரண்டி.

உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி.

தனியா -2 தேக்கரண்டி.

வரமிளகாய்-5

கருவேப்பிலை- 1 கைப்பிடி.

சீரகம்-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

புளியோதரை செய்வதற்கு,

நல்லெண்ணெய்-1/4 கப்.

கடுகு-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-4

பச்சை மிளகாய்-4

வேர்க்கடலை-4 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

கரைத்து வைத்த புளி-2 கப்.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

வடித்த சாதம்- 4 கப்.

திருப்பதி ஸ்பெஷல் புளியோதரை செய்முறை விளக்கம்;

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் கடலைப் பருப்பு 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி, தனியா 2 தேக்கரண்டி, வரமிளகாய் 5, கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில்  சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் நல்லெண்ணெய் ¼ கப், கடுகு 1 தேக்கரண்டி, கடலைப் பருப்பு 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 4, வரமிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு, வேர்க்கடலை 4 தேக்கரண்டி, 2 கப் கரைத்து வைத்த புளி தண்ணீரை சேர்த்து மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து மூடிப்போட்டு 15 நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும்வரை வைக்கவும். இப்போது அரைத்த பவுடரில் 1 தேக்கரண்டியை தனியாக எடுத்து வைத்து விட்டு மீதியை போட்டு நன்றாக கிண்டவும். ஒரு 5 நிமிடத்தில் தொக்கு பதத்திற்கு வந்த பிறகு வடித்த சாதத்தில் சேர்த்து இத்துடன் எடுத்து வைத்த 1 தேக்கரண்டி பொடியை சேர்த்து கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.இப்போது நல்ல ‘கம கம’ கோவில் வாசத்துடன் திருப்பதி தேவஸ்தான புளியோதரை தயார். நீங்களும் கண்டிப்பாக இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.

தர்மபுரி ஸ்பெஷல் மிளகாய் வடை செய்ய தேவையான பொருட்கள்;

பச்சரிசி-2 கப்.

துவரம் பருப்பு-1 கப்.

வரமிளகாய்-5

இஞ்சி-1 துண்டு.

பூண்டு-5

சின்ன வெங்காயம்-10

கருவேப்பிலை-சிறிதளவு.

பட்டை-1

கிராம்பு-1

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான ராகி வாழைப்பழ அப்பமும், பால் பத்திரியும் செய்யலாம் வாங்க!
Puliyodharai and milagai vadai Recipes

தர்மபுரி ஸ்பெஷல் மிளகாய் வடை செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி 2 கப், துவரம் பருப்பு 1 கப் சேர்த்து நன்றாக கழுவியதும் தேவையான அளவு தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.

இப்போது மிக்ஸியில் 5 வரமிளகாய், பூண்டு 5, 1 துண்டு இஞ்சி, கருவேப்பிலை சிறிதளவு, சின்ன வெங்காயம் 10, பட்டை 1, கிராம்பு 1 சேர்த்து நன்றாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் ஊறவைத்த அரிசி பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இந்த மாவு கொஞ்சம் தண்ணீராக இருக்கவேண்டும். ஏனெனில், இதை வடை மாதிரி தட்ட மாட்டார்கள். ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து காய வைத்திருக்கும் எண்ணெய்யில் ஊற்றி நன்றாக மொறு மொறுவென்று ஆன பிறகு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான தர்மபுரி மிளகாய் வடை தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com