சுவையான மாம்பழ உணவு வகைகள்!

tasty Mango ice cream
mango ice cream...image credit - pixabay
Published on

மாம்பழ ஐஸ்கிரீம்:

இது சுவையான மற்றும் பழச்சுவையுடன் கூடிய இனிப்பு வகையாகும். வீட்டில் சுலபமாக தயார் செய்யக்கூடியது.

தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழம் _2

பால் _1 கப்

கண்டென்ஸ்டு மில்க் _1/2 கப்

பழகிய கிரீம்(heavy cream) _1கப்

சர்க்கரை 1/4 கப்

வென்னிலா எசன்ஸ் _1/2 ஸ்பூன்

செய்முறை:  முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கி துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் மாம்பழ விழுது, பால், சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கிரீமை போட்டு  மிருதுவாக வரும் வரை கடையவும்.(தண்ணீர் சேரக் கூடாது) கடைந்து வைத்த கிரீமை மாம்பழ கலவையில் சேர்த்து மெதுவாக கலக்கவும்.

இந்த கலவையை ஒரு ஏர்டைட்  டப்பாவில் ஊற்றி 6_8 மணி நேரம் அல்லது முழுக்க உறையும் வரை ஃப்ரீசரில் வைக்கவும். ஐஸ் கிரீம் முழுவதும் உறைந்த பிறகு சிறிய கப்களில் எடுத்து மேலே மாம்பழத் துண்டுகள், நட்டுக்கள் அல்லது சாக்லேட் சிப்புகளை கொண்டு அலங்கரிக்கவும். மாம்பழ ஐஸ்கிரீம் ஒரு அற்புதமான இனிப்பு.

இதையும் படியுங்கள்:
'மைசூர் பாக்’ உருவான கதை தெரியுமா?
tasty Mango ice cream

உலக அளவில் ட்ரெண்ட்டான ஆம்ரஸ்:

ஆம்ரஸ் எளிதில் செய்து விடலாம். மஹாராஷ்டிரா, புனே, உள்ளிட்ட பகுதிகளில் பூரிக்கு ஆம்ரஸ் வைத்து சாப்பிடும் பழக்கம் உண்டு.

தேவையான பொருட்கள்:

கனிந்த மாம்பழம் _2

பால்  _1 கப்

கண்டென்ஸ்டு மில்க் _1/2 கப்

தேன் _2 ஸ்பூன்

ஏலக்காய் தூள் _1/2 ஸ்பூன்

குங்குமப்பூ _1/2 ஸ்பூன்

செய்முறை:  மாம்பழத்தை  நன்றாக சுத்தம் செய்து தோல் நீக்கி நன்றாக மசிக்க வேண்டும். அல்லது மிக்ஸியில் அரைத்து எடுக்கலாம். இதில் தேன் சேர்த்து அத்துடன் திக்கான பால், ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்தால் ஆம்ரஸ் தயார். இதை ஃப்ரிட்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.

மாம்பழ லஸ்லி

தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழம் _1 (பெரிய துண்டுகளாக வெட்டப்பட்டது)

தயிர் _1 கப்

பால் _1/2 கப்

சர்க்கரை அல்லது தேன் _2 ஸ்பூன்

ஏலப்பொடி _1/2 ஸ்பூன்

ஐஸ் கட்டிகள் _தேவைக்கு

செய்முறை: மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அதில் தயிர், பால், சர்க்கரை அல்லது தேன் சேர்த்து மீண்டும் நன்றாக அடிக்கவும். இதை ஒரு கண்ணாடி குவளை அல்லது பானையில் ஊற்றி அதில் ஐஸ் கட்டிகள் சேர்க்கவும். அதன் மேல் ஏலக்காய் பொடியை தூவி மாம்பழ லஸ்லியை குளிர்ச்சியாக உடனே பரிமாறலாம். இதன் மேலே நறுக்கிய மாம்பழ துண்டுகள், பிஸ்தா, பாதாம் போன்ற பருப்புகளால் அலங்கரிக்கலாம்.

tasty mango milkshake...
mango lassiImage credit - pixabay

மாம்பழ இளநீர் ஷேக்

செய்முறை: தேவையான அளவு இளம் தேங்காய் எடுத்து கொண்டு அதில் உள்ள இளநீரில் கிடைக்கும் தேங்காய், தண்ணீர் இரண்டையும் எடுத்துக் கொண்டு அத்துடன் தோல் நீக்கிய நன்கு பழுத்த மாம்பழத்தை துண்டு களாக்கி மிக்ஸி ஜாரில் போட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்தால் திக்கான ஷேக் தயார். இனிப்பு தேவை என்றால்  கண்டன்ஸ் மில்க் அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம் ஃப்ரிட்ஜில் வைத்து குடித்தால் கோடைக்கு நன்றாக இருக்கும்.

உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், மற்றும் வளர்ச்சிதை மாற்றம், ஆற்றல் உற்பத்திக்கு உதவும் மாம்பழம் நார்சத்து நிறைந்தது.  கலோரியும் குறைவு. சத்து மிகுந்த இளநீர் ஜூஸ் செய்து குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com