சுவையான மொறு மொறு தோசை வகைகள்!

Types of dosa...
dosai recipesImage credit - youtube
Published on

ஜவ்வரிசி தோசை:

தேவையான பொருட்கள்:

பொருள் அளவு

ஜவ்வரிசி 1 கப்

புழுங்கல் அரிசி3 கப்

மைதா மாவுஅரை கப்

பச்சை மிளகாய்5

இஞ்சிசிறு துண்டு

வெங்காயம்2

கறிவேப்பிலை1 கொத்து

எண்ணெய்தேவைக்கேற்ப

உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

ஜவ்வரிசியை தண்ணீரில் கழுவி, 2 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் அரைக்கவும். அரிசி நன்கு அரைக்கப்பட்டவுடன் ஜவ்வரிசியையும் சேர்த்து அரைக்கவும்.

பின்னர் மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கரைத்து, மாவை 3 மணி நேரம் புளிக்க விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து வதக்கவும். இதை மாவில் கொட்டி கலக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து இருபுறமும் வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: புதினா சட்னியுடன் சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

ரவா தோசை:

தேவையான பொருட்கள்:

பொருள் - அளவு

ரவைமுக்கால் கப்

அரிசி மாவுஒன்றரை கப்

மைதா மாவுஒரு டேபிள் ஸ்பூன்

முந்திரி5

இஞ்சி விழுது1 டீஸ்பூன்

பச்சை மிளகாய்4

கறிவேப்பிலை1 கொத்து

மிளகு2 டீஸ்பூன்

சீரகம்1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
Lunch Box Recipe:வரகரிசி பிரியாணி வித் சுரைக்காய் பப்பு செய்யலாமா?
Types of dosa...

செய்முறை :

எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்க்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவை நன்கு கலக்கி ஊற்றவேண்டும்.

பிறகு தீயைக் குறைத்து, சுற்றிலும் எண்ணெய் விட வேண்டும். நன்றாக வெந்ததும் மடித்து எடுக்க வேண்டும்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: காரச் சட்னி, தேங்காய் சட்னியில் தொட்டு சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com