இன்றைக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபிஸான ஆரோக்கியமான வரகரிசி பிரியாணி மற்றும் ஆந்திரா ஸ்பெஷல் சுரைக்காய் பப்பு வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
வரகரிசி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்.
வரகரிசி-1கப்.
தேங்காய் எண்ணெய்-4 தேக்கரண்டி.
கிராம்பு-1
பட்டை-1
சோம்பு-1 தேக்கரண்டி.
பிரியாணி இலை-1
வெங்காயம்-1
இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-2
உப்பு- தேவையான அளவு.
புதினா, கொத்தமல்லி-சிறிதளவு.
உருளை-1கப்.
பட்டாணி-1 கப்.
கேரட்-1 கப்.
பீன்ஸ்-1 கப்.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
பிரியாணி மசாலா-1 தேக்கரண்டி.
தயிர்-2 தேக்கரண்டி.
வரகரிசி பிரியாணி செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 1 கப் வரகரிசியை எடுத்துக்கொண்டு நான்கு முறை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு அரிசி மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 15 நிமிடம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்விட்டு பட்டை1, காராம்பு 1, பிரியாணி இலை 1, சோம்பு 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் 1, உப்பு தேவையான அளவு, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இதில் பட்டாணி 1கப், கேரட் 1கப், உருளை 1 கப், பீன்ஸ் 1 கப் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி,மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, பிரியாணி மசாலா 1 தேக்கரண்டி, 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். மசாலாவுடைய பச்சை வாசம் போய் காய்கறிகள் வெந்ததும் 1 கப் வரகரிசிக்கு 2 கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்துக் கிண்டவும். பிறகு மூடிப்போட்டு 25 நிமிடம் நெருப்பை குறைத்து வைத்து லோ பிளேமில் வேக விட்டு எடுத்தால் கமகம வரகரிசி பிரியாணி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
சுரைக்காய் பப்பு செய்ய தேவையான பொருட்கள்.
சுரைக்காய்-2கப்.
வெங்காயம்-1 கப்.
தக்காளி-1 கப்.
பச்சை மிளகாய்-3
பயித்தம் பருப்பு-1கப்.
துவரம் பருப்பு-1கப்.
புளி-எழுமிச்சை அளவு.
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
எண்ணெய்-4 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-4
கருவேப்பிலை-சிறிதளவு.
இடித்த பூண்டு-4
பெருங்காயத்தூள்-சிறிதளவு
உப்பு- தேவையான அளவு.
நெய்- 1தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
சுரைக்காய் பப்பு செய்முறை விளக்கம்.
முதலில் குக்கரில் சிறிதாக நறுக்கிய சுரைக்காய் 2 கப், நறுக்கிய வெங்காயம் 1கப், நறுக்கிய தக்காளி 1 கப், சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 3, பயித்தம் பருப்பு 1 கப், துவரம் பருப்பு 1 கப், எழுமிச்சை அளவு புளி, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, 2 கப் தண்ணீர்விட்டு குக்கரில் 5 விசில்விட்டு நன்றாக மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் 4 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு, இடித்து வைத்த பூண்டு 4, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு வேகவைத்த பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு 1 தேக்கரண்டி நெய்விட்டு கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை சிறிதளவு தூவி இறக்கவும். சுவையான ஆந்திரா ஸ்பெஷல் சுரைக்காய் பப்பு தயார். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பாருங்கள்.