சுவையான சத்தான டேட்ஸ் இட்லி, பிடி கருணை அடை ரெசிபிஸ்!

டேட்ஸ் இட்லி, பிடி கருணை அடை ...
டேட்ஸ் இட்லி, பிடி கருணை அடை ...www.youtube.com

டேட்ஸ் இட்லி

தேவை: இட்லி மாவு - 1 கப், பேரீச்சம் பழம் - 100 கிராம். பால் - தேவையான அளவு, திராட்சை, முந்திரி - தலா 25 கிராம், ஏலக்காய் - 2 (விருப்பப்பட்டால்) நெய் - சிறிதளவு.

செய்முறை:  கொட்டை நீக்கிய பேரீச்சம்பழத்துடன் ஏலக்காய் சேர்த்து மூழ்குமளவு பாலூற்றி வேகவைக்கவும். பால் முழுதும் வற்றியதும் ஆறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை இட்லி மாவோடு கலந்துவைக்கவும். திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். இட்லித் தட்டில் நடுவில் முந்திரியை வைத்து சுற்றிலும் திராட்சை வைத்து மாவை ஊற்றி வேகவிடவும். சுவையான சத்தான உணவு. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

- ருக் ஷனா முபாரக், பொள்ளாச்சி.

பிடி கருணை அடை

தேவை: பிடிகருணை – ¼ கிலோ, காராமணி - 50 கிராம். பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை. கொத்துமல்லித் தழை தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
பூரி Tacos செய்யலாம் வாங்க! 
டேட்ஸ் இட்லி, பிடி கருணை அடை ...

செய்முறை: பிடி கருணையையும் காராமணியையும் நன்கு அலம்பி தனித்தனியே தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். ஆறியதும்.. கிழங்கைத் தோல் உரித்து வைக்கவும். பச்சை மிளகாய்யைப் பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் கறிவேப்பிலைச் சேர்த்து கடுகு தாளித்து பச்சை மிளகாய் சேர்த்து இலேசாக வதக்கவும். கிழங்கைக் கையால் மசித்துச் சேர்த்து வேகவைத்த காராமணியும் போட்டு சிறிது நேரம் கிளறி இறக்கவும். வாழை இலையில் எண்ணெய்த் தடவி, கிழங்குக் கலவையை சிறிய உருண்டைகளாக்கி அடையாகத் தட்டி ஆவியில் வேக வைக்கவும், கொத்து மல்லி தூவிப் பரிமாறவும்.

இந்த பிடிகருணை அடையை வெல்லம் சேர்த்தும் செய்யலாம். இந்த அடை 'மூல' நோயாளிகளுக்கு நல்ல மருந்து.

- கல்யாணி, சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com