Poori Tacos Recipe.
Poori Tacos Recipe.

பூரி Tacos செய்யலாம் வாங்க! 

மெக்சிகன் ஸ்ட்ரீட் ஃபுட் வகையான Tacos அதன் மாறுபட்ட சுவைக்காக உலக அளவில் பிரபலமானதாகும். என்னதான் இந்தியர்களுக்கு இதைப்பற்றி பெரிதாக தெரியவில்லை என்றாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இடங்களிலும் பிரபலமடைந்து வருகிறது. இந்த உணவை கடைகளிலேயே பொதுமக்கள் வாங்கி ருசிக்கின்றனர். ஆனால் இதை எளிதாக வீட்டிலேயே நாம் செய்ய முடியும். இந்த பதிவில், வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி பூரி டாக்கோஸ் எப்படி செய்வது? எனத் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

  1. ஃபில்லிங்சுக்கு

பட்டாணி - வேக வைத்தது 1 கப்

வெங்காயம் - ¼ கப்

தக்காளி - ¼ கப்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

கேரட் - ¼ கப் நறுக்கியது

சில்லி சாஸ் - ¼ ஸ்பூன் 

எலுமிச்சை சாறு - ½ Lemon

உப்பு - சிறிதளவு

மிளகுத்தூள் - சிறிதளவு

  1. Tacos செய்ய

கோதுமை மாவு - 1 கப்

தயிர் - 2 ஸ்பூன் 

சமையல் சோடா - ¼ ஸ்பூன் 

உப்பு - சிறிதளவு

எண்ணெய் - சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தயிர், சமையல் சோடா, உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். அதன் மீது கொஞ்சம் எண்ணெய் தடவி அரை மணி நேரம் ஊற விட வேண்டும். 

மாவு ஊறிக் கொண்டிருக்கும் வேளையில், டாக்கோஸ் உள்ளே வைக்கும் ஸ்டஃபிங் செய்து கொள்ளலாம். முதலில் பட்டாணியை கொஞ்சமாக உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை கொஞ்சமாக மசித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை, கேரட் ஆகியவற்றை அதில் சேர்த்து கலக்கவும். 

அதன் பிறகு தயிர், சில்லி சாஸ் சேர்த்து கலந்ததும் சிறிதளவு உப்பு, மிளகு பொடி மேலே தூவி நன்றாகக் கலக்கவும். இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் கலந்தால் டாக்கோஸ் ஸ்டஃபிங் தயார்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் ரசித்து… ருசிக்க… மீல் மேக்கர் கோலா உருண்டை!
Poori Tacos Recipe.

மாவு ஊறியதும் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக உருட்டிக் கொள்ளுங்கள். உருட்டிய மாவின் மேல் ஃபோர்க் அல்லது சீப்பு வைத்து சிறு துளைகளை ஏற்படுத்துங்கள். அப்போதுதான் டாக்கோஸ் பூரி போல உப்பாமல் வரும். பின்னர் அதை அப்படியே எண்ணெயில் பொரித்தெடுங்கள். பொரிக்கும்போதே பூரியை இரண்டாக மடித்து கடினமாக இருக்கும் படி பொரிக்க வேண்டும். அப்போதுதான் அதன் நடுவே ஸ்டஃபிங் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும். 

இப்படி வீட்டில் டாக்கோஸ் செய்ய முடியாதவர்கள் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் டாக்கோஸ் பயன்படுத்தலாம். 

இறுதியாக செய்து வைத்த பூரி டாக்கோசுக்கு நடுவே ஸ்டஃபிங்க்கை வைத்தால், சுவையான வெஜ் பூரி டாக்கோஸ் தயார். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுக்க விரும்பும் தாய்மார்கள் இதை நிச்சயம் முயற்சிக்க வேண்டும். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com