சுவைக்க ருசியான பனீர் வித் ஸ்பைசி பாஸ்தாவுடன் - வெஜ் சமோசா!

Delicious Paneer with Spicy Pasta - Veg Samosa!
Healthy snacks
Published on

பால் சார்ந்த உணவுப்பொருளான பனீரின் சுவையும் அதில் செய்யும் உணவுப் பொருட்களை அனைவரும் விரும்புவார்கள். புரதச்சத்து மிக்க பனீரை அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியம் கூடும். இனி பனீர் வித் ஸ்பைசி பாஸ்தாவும், பனீர் வித் உருளை சமோசாவும் செய்யலாமா?

பனீர் வித் ஸ்பைசி பாஸ்தா

தேவை:

பாஸ்தா - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 5 பற்கள்

பனீர் - 100 கிராம்

குடமிளகாய்- சிறியது 1

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

வெங்காயத்தாள் - 10

எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தக்காளி - 2

வர மிளகாய்- 5

சீரகம் - 1/2டீஸ்பூன்

தனியா - 1 டீஸ்பூன்

பட்டை கிராம்பு- தலா 2

செய்முறை:

பாஸ்தாவை கொதிக்கும் தண்ணீரில் சிறிது எண்ணெய்விட்டு சேர்த்து வேகவைத்து நீரை நன்கு வடித்துக்கொள்ளவும். பாஸ்தா பதமாக வெந்திருக்க வேண்டும். பனீரையும் சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நெய்யில் சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து தக்காளி, மிளகாய், சீரகம், தனியா அரைத்த விழுதை சேர்த்து வாசம் வரும்வரை வதக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், வெங்காயத்தாள் (பாதி) சேர்ந்து வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
பாத்திரங்களை 'பளீச்' ஆக்கும் டிஷ் வாஷ் பொடி... வீட்டிலேயே செய்து அசத்தலாம் வாங்க!
Delicious Paneer with Spicy Pasta - Veg Samosa!

தேவை எனில் சிறிது நீர் தெளிக்கலாம். ஒரு கொதி வந்தவுடன் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறவும். இதில் தேவையான உப்பு மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக்கிளறி இறக்கு முன் வறுத்த பனீரைக் கலந்து நறுக்கிய வெங்காயத் தாளின் மீதிப் பகுதியையும் பரவலாக தூவி தக்காளி சாஸ் உடன் சூடாக பரிமாறவும். பாஸ்தா ஆறிவிட்டால் சுவை குறையும்.

பனீர் வித் உருளை சமோசா

தேவை:

மைதா அல்லது கோதுமை மாவு - 1 கப் நெய் - 2 டீஸ்பூன்

பனீர் துருவல்- 1/2 கப்

உருளைக்கிழங்கு - 2

மிளகுத்தூள்- 1 /2 டீஸ்பூன்

ஓமம் - சிறிது

உப்பு - 1 டீஸ்பூன்

பட்டை கிராம்பு பொடி - கால் டீஸ்பூன்

எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு

செய்முறை:

பனீரை துருவியில் துருவிக்கொள்ளவும். உருளைக் கிழங்கை வேகவைத்து மடித்துக்கொள்ளவும். இரண்டையும் பாத்திரத்தில் போட்டு சிட்டிகை உப்பு மிளகுத்தூள், பட்டை கிராம்பு பொடி மற்றும் உலர் திராட்சை (உங்கள் சாய்ஸ்) ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதுதான் பூரணம்.

இப்போது மைதா அல்லது கோதுமை மாவை சலித்து ஓமம், உப்பு, நெய் ஆகியவற்றுடன் தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து மாவை சிறிய வட்டங்களாக தேய்த்து நடுவில் கொஞ்சம் பூரணம் வைத்து சமோசா வடிவத்தில் செய்து காய்ந்த எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். இப்போது வீட்டிலேயே பனீர் வித் உருளை சமோசா சுடச்சுட ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com