முள்ளங்கி சாம்பார்;
தேவையான பொருட்கள்:
பொருள் அளவு
துவரம் பருப்பு கால் கிலோ
வெள்ளை முள்ளங்கி2
புளிக்கரைசல்அரை கப்
பெரிய வெங்காயம் 3 (நறுக்கியது)
தக்காளி 3
பச்சை மிளகாய்3
சாம்பார் தூள் ஒன்றரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
கடுகுஅரை டீஸ்பூன்
சீரகம்அரை டீஸ்பூன்
பூண்டு பல்4
மிளகு4
கறிவேப்பிலைஒரு கொத்து
தேங்காய்த் துருவல்கால் கப்
கொத்தமல்லி இலைஒரு கைப்பிடி
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
முள்ளங்கியை கழுவி தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்புடன் மஞ்சள் தூள் மற்றும் அதனுடன் சீரகம், பூண்டு, மிளகு மற்றும் எண்ணெய் சிறிதளவு ஊற்றி வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன் பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு நறுக்கிய முள்ளங்கி சேர்த்து, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து காய் பாதி வேகும் வரை வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
காய் வெந்ததும் வேகவைத்து மசித்த பருப்பை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
இறுதியாக தேங்காய்த் துருவல், சாம்பார் தூள் சேர்த்து நுரைக்கட்டி லேசாகக் கொதிவந்ததும் கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சூடான சாதத்துடன் சாப்பிடலாம். தயிர் சாதத்துடன் சேர்த்தும் இதை சாப்பிடலாம்.
குறிப்பு : இதேபோல் சிகப்பு முள்ளங்கியையும் சமைக்கலாம்.
கருணை கிழங்கு முறுக்கு
தேவையான பொருட்கள் :
பொருள் அளவு
கருணை கிழங்குகால் கிலோ
அரிசி மாவு150 கிராம்
உளுந்து மாவு100 கிராம்
பெருங்காயம்1 டீஸ்பூன்
மிளகாய் தூள்2 டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள்2 டீஸ்பூன்
எண்ணெய்தேவைக்கேற்ப
உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
கருணை கிழங்கை தோல் சீவி, வேகவைத்துக் கொள்ளவும்.
எள்ளை நீரில் கழுவி வைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவு, உளுந்து மாவு, பெருங்காயம், எள், மிளகாய் தூள், கருணைக்கிழங்கு மசியல் ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து, அந்த எண்ணெயிலிருந்து, இரண்டு தேக்கரண்டி எண்ணெய் எடுத்து, மாவில் கலந்து கொள்ளவும்.
அதன் பிறகு முறுக்கு குழாயில் மாவை போட்டு, எண்ணெயில் பிழியவும். தீயைக் குறைத்து வைக்க வேண்டும். முறுக்கு நன்றாக வெந்தவுடன் எடுக்கவும்.