நாவூர வைக்கும் நெல்லிக்காய் சாதம் - பருப்பு உருண்டை குழம்பு ரெசிபிஸ்!

A delicious recipe for Gooseberry Rice-Dal Balls gravy!
A delicious recipe for Gooseberry Rice-Dal Balls gravy!
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

இன்றைக்கு சுவையான நெல்லிக்காய் சாதம் மற்றும் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

1. நெல்லிக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய்-4

இஞ்சி-1 துண்டு.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

உப்பு-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

உளுந்து-1 தேக்கரண்டி.

முந்திரி-5

கருவேப்பிலை-சிறிதளவு.

வேர்க்கடலை-1 தேக்கரண்டி.

காய்ந்த மிளகாய்-5

சாதம்-2 கப்.

கொத்தமல்லி-சிறிதளவு.

நெல்லிக்காய் சாதம் செய்முறை விளக்கம்.

முதலில் பவுலில் துருவிய 4 நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் துருவிய 1 துண்டு இஞ்சி, 1 தேக்கரண்டி உப்பு, ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பிசைந்துவிடவும். இதை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வேர்க்கடலை 1 தேக்கரண்டி சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இத்துடன் 5 காய்ந்த மிளகாய், முந்திரி 5, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

இப்போது இதில் பிசைந்து வைத்திருக்கும் நெல்லிக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். இதில் வடித்து ஆற வைத்த சாதம் 2 கப்பை சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் நெல்லிக்காய் சாதம் தயார்.

2. பருப்பு உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

பருப்பு உருண்டை செய்ய:

கடலைப்பருப்பு-1 கப்.

துவரம் பருப்பு-1/4 கப்.

காய்ந்த மிளகாய்-4

சோம்பு-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

கருவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு.

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-2

குழம்பு செய்ய:

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

கடுகு-1 தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.

வெந்தயம்-1 தேக்கரண்டி.

பூண்டு-4

காய்ந்த மிளகாய்-4

கருவேப்பிலை-சிறிதளவு.

சின்ன வெங்காயம்-15.

தக்காளி-1

சாம்பார் பொடி-4 தேக்கரண்டி.

புளி-எழுமிச்சைப்பழ அளவு.

தேங்காய்ப்பால்-1 கப். 

பருப்பு உருண்டை குழம்பு செய்முறை விளக்கம்.

3 மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பு 1 கப், துவரம் பருப்பு ¼ கப், காய்ந்த மிளகாய் 4, சோம்பு 1 தேக்கரண்டி, உப்பு 1 தேக்கரண்டி சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.  இப்போது அதை பவுலில் மாற்றிவிட்டு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, நறுக்கிய பச்சை மிளகாய் 2 சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, பூண்டு 4, காய்ந்த மிளகாய் 4, கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய சின்ன வெங்காயம் 15, பொடியாக நறுக்கிய தக்காளி 1 ஆகியவற்றை நன்றாக வதக்கிவிட்டு சாம்பார் பொடி 4 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிடவும்.

இதில் எழுமிச்சை பழ அளவு புளியை கரைத்து சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் இரண்டு கப் சேர்த்து குழம்பு நன்றாக கொதித்ததும் தேங்காய்ப்பால் 1 கப் சேர்த்துக் கொள்ளவும். கடைசியாக உருண்டைகளை குழம்பில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். அவ்வளவு தான் பருப்பு உருண்டை குழம்பு தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
சுவையான திருவையாறு அசோகா அல்வா - ஹாட் டாக் ரெசிபிஸ் செய்யலாமா?
A delicious recipe for Gooseberry Rice-Dal Balls gravy!
logo
Kalki Online
kalkionline.com