ருசியான சமையல்: சத்தான கொண்டைக்கடலை சூப் மற்றும் பட்டாணி நிமோனா கறி!

Nutritious  soup
Delicious recipes
Published on

தேவையான பொருட்கள்:

1.எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் 1 டேபிள் ஸ்பூன்

2. பொடிசா நறுக்கிய வெங்காயம் 1

3.நசுக்கிய பூண்டு பல் 3

4.சீரக பொடி 1 டீஸ்பூன்

5.பட்டை பொடி ¼ டீஸ்பூன்

6.பாப்ரிக்கா 1 டீஸ்பூன்

7.ஸ்வீட் பொட்டட்டோ 350 கிராம்

8.வேக வைத்த கொண்டைக் கடலை 225 கிராம்

9.வெஜிடேபிள் ப்ரோத் 2½ கப்

10.உப்பு தேவையான அளவு

11.கருப்பு மிளகுத் தூள் தேவையான அளவு

12.தேங்காய்ப் பால் 1 கப்

13.லெமன் ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்

14.நறுக்கிய செலரி தண்டு ⅓ கப்

செய்முறை:

ஒரு பெரிய வாயகன்ற கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி மீடியம் தீயில் சூடாக்கவும். அதில் வெங்காயம், செலரி மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பிறகு அதனுடன் பூண்டு, பாப்ரிக்கா, சீரகபொடி சேர்த்து வாசனை வரும்வரை கிளறிவிடவும். அதில், தோல் சீவி, சற்றே பெரிய வடிவில் நறுக்கிய ஸ்வீட் பொட்டட்டோ, கொண்டைக் கடலை, வெஜிடேபிள் ப்ரோத், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பின் மூடி போட்டு மூடி, 20-25 நிமிடம் வைத்து, சிறு தீயில் ஸ்வீட் பொட்டட்டோவை மிருதுவாகும் வரை நன்கு வேகவிடவும்.

பின் தீயை அணைத்துவிடவும். கலவை ஆறியதும், ஒரு கை மிக்ஸர் (Hand blender) உதவியால் நன்கு மசியும் வரை கடையவும். சூப் திக்காக இருந்தால் மேலும் கொஞ்சம் ப்ரோத் அல்லது சுடு நீர் சேர்த்து, விரும்பிய டெக்சருக்கு கொண்டு வரவும். பின் தேங்காய்ப் பால், லெமன் ஜூஸ், பட்டை பொடி, சில பார்சலே இலை சேர்த்து, மேற் பரப்பில் சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து, சிம்பிளான, ஆரோக்கியம் நிறைந்த ஸ்வீட் பொட்டட்டோ - கொண்டைக்கடலை சூப்பை அருந்தி மகிழவும்.

உத்திரப் பிரதேஷ் ஸ்பெஷல் நிமோனா கறி ரெசிபி

தேவையான பொருட்கள்:

1.பச்சைப் பட்டாணி 2 கப்

2.உருளைக் கிழங்கு 2

3.நறுக்கிய பெரிய வெங்காயம் 1

4.நறுக்கிய தக்காளி 2

5.பச்சை மிளகாய் 2 அல்லது 3

6. இஞ்சி ஒரு சிறு துண்டு

7.பூண்டு 5 பல்

8.மஸ்டர்ட் ஆயில் 3 டேபிள் ஸ்பூன்

9.சீரகம் ½ டீஸ்பூன்

10.பெருங்காயம் ¼ டீஸ்பூன்

11.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்

12.தனியா பவுடர் 1 டீஸ்பூன்

13.சிவப்பு மிளகாய் தூள் ½ டீஸ்பூன்

14.கரம் மசாலா தூள் ½-1 டீஸ்பூன்

15.தேவையான அளவு உப்பு

16.தண்ணீர் 2 அல்லது 2½ கப்

17.கொத்தமல்லி இலைகள் அலங்கரிக்க

இதையும் படியுங்கள்:
பேக்கரி ஸ்டைல் பட்டர் வெஜ் கேக் செய்வது எப்படி?
Nutritious  soup

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் சீவி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைப் பட்டாணியை, தண்ணீர் விடாமல் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு மூன்றையும் ஒன்றாக அரைத்துப் பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் மஸ்டர்ட் ஆயில் ஊற்றி நன்கு சூடாக்கி பின் சூட்டைக் கொஞ்சம் ஆறவிட்டு, சீரகம் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். அவை சிவந்ததும் வெங்காயம் சேர்த்து கோல்டன் பிரவுன் வரும்வரை வதக்கவும். பின் அரைத்து வைத்த இஞ்சி பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிட நேரம் வதங்க செய்யவும்.

பின் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறிவிடவும். பின் மஞ்சள் தூள், தனியா பவுடர், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். அனைத்தையும் நன்கு கலந்துவிட்டு, பின் உருளைக் கிழங்கு சேர்க்கவும். அவ்வப்போது கிளறிவிட்டு கிழங்கை 4 நிமிடம் வேகவிடவும்.

பின் அரைத்து வைத்துள்ள பட்டாணியை சேர்த்து 4-5 நிமிடம் வைத்து மசாலவுடன் கிளறிவிடவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 5-10 நிமிடம் நன்கு கொதித்து கறி பதம் வரும் வரை வைத்திருக்கவும். பின் கரம் மசாலா, மல்லி இலைகள் சேர்த்து கலந்து இறக்கிவிடவும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையான நிமோனா கறி தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com