இனிப்பு சோளம் ஸ்வீட்கார்ன் சுண்டல்
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் கார்ன் - 2
எண்ணெய் - தேவையானவை
மிளகாய் வற்றல் - 4
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - அரை மூடி
காரப்பொடி - 1/2 ஸ்பூன்
செய்முறை:
ஸ்வீட் கார்னை தோலை நீக்கிவிட்டு வேகவைத்து எடுத்து கான் முத்துக்களை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், தனியா ஆகியவற்றை வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடி செய்ய வேண்டும்.
மீண்டும் வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து உதிர்த்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன், உப்பு, தேங்காய்த் துருவல், பொடித்த காரப்பொடி சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். டேஸ்டியான ஸ்வீட் கார்ன் சுண்டல் ரெடி.
சோயா பீன்ஸ் சுண்டல்
தேவையான பொருட்கள்:
காய்ந்த வெள்ளை சோயா பீன்ஸ் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
துருவிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
செய்முறை:
சோயா பீன்சை ஒரு நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, குக்கரில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 3 விசில் மிதமான தீயில் வேகவைக்கவும். வெந்தவுடன் நீரை வடித்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், பின் வேக வைத்த சோயா பீன்ஸை சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும். ஆரோக்கியம் நிறைந்த சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.
ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சுண்டல்
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை -100 கிராம்,
செய்முறை:
முதலில் ஜவ்வரிசி, பாசிப்பருப்யை நன்கு ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நன்கு வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதில் வெக வைத்த ஜவ்வரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, சேர்த்துக் கிளறி இறக்கவும். சத்துகள் நிறைந்த ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சுண்டல் ரெடி.
நவதானிய சுண்டல்
தேவையான பொருட்கள்:
அரிசி பொரி - 1/2 கப்
பச்சைப் பயறு - 4 டீஸ்பூன்
துவரை, மொச்சை, கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை - அனைத்தும் அரை கப்
எள் - 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
கோதுமை மாவு - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
எள், மிளகாய் உப்பு, ஆகியவற்றை வறுத்து பொடிசெய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். துவரை, மொச்சை, கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை எல்லாவற்றையும் தனித்தனியாக ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். கோதுமை மாவை, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, பின்னர் பொடியாக உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் பொடித்துவைத்த கோதுமை பொடியை சேர்த்துக் கிளறவும். நன்கு வெந்ததும் இதனை இறக்கி இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கிளறவும். சூடான சுவையான நவதானிய சுண்டல் தயார்.