தேவையான பொருட்கள்:
மொச்சை கொட்டை - 100 கிராம்
பச்சை மிளகாய் -5
இஞ்சி - 1 துண்டு
உப்பு தேவைக்கேற்ப
இட்லி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
கடுகு 2 ஸ்பூன்
எண்ணெய் - தாளிக்க
நெய் - 2 ஸ்பூன்
கடலைமாவு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
மொச்சைக் கொட்டையை கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும். மறுநாள் காலை நன்கு சுத்தமாக களைந்து எடுத்து வைத்து , தண்ணீருடன் உப்பு சேர்த்து, நன்றாக வேகவிட்டு வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு , கடுகு மஞ்சள் தூள், பச்சை மிளகாய் , இஞ்சி இட்லி மிளகாய் பொடி, மொச்சையை போட்டு கடலைமாவை கரைத்து ஊற்றி நன்றாக கலக்கவும். நெய்யில் கறிவேப்பிலையை வறுத்து போடவும்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை பட்டாணி -1 கப்
எண்ணெய் -1ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - ஒரு துண்டு
இட்லி மிளகாய் தூள்-1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை
பெருங்காயம்
செய்முறை:
பச்சை பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைக்கவும். மறுநாள் காலை அதை களைந்து உப்பு போட்டு வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், இஞ்சி, இட்லி மிளகாய் பொடி போட்டு நன்றாக வதக்கிக் வெந்த பட்டாணியை அதில் போட்டு நெய்விட்டு நன்றாகக் கிளறி கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
காராமணி -1 கப்
எண்ணெய் -1ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
இட்லி மிளகாய் தூள்-1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை
பெருங்காயம்
செய்முறை:
வெறும் வாணலியில் காராமணியை வறுத்து, பிறகு உப்பு போட்டு வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், இஞ்சி, இட்லி மிளகாய் பொடி போட்டு நன்றாக வதக்கிக் வெந்த காராமணியைஅதில் போட்டு நெய்விட்டு நன்றாகக் கிளறி கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு இறக்கவும்.