சத்துமிக்க பாதாமில் சுவையான ஸ்வீட் – காரம் ரெசிபிஸ்!

பாதாம்...
பாதாம்...
Published on

-பி. ஆர். இலட்சுமி

ம் உணவில் வெறும் அரிசி, தோசை வகைகளை மட்டும் சாப்பிட்டால் மட்டும் போதாது. வரகு, தினை, கோதுமை போன்ற சிறுதானிய உணவுகளைச் சேர்த்து சாப்பிட்டால் உடல்நலம் வலுப்பெறும்.

பொதுவாக ஆங்கில மருந்துகள் உடலில் விரைவாகச் செயல்புரியும். ஆனால், தமிழ் மருந்துகள் மெல்ல மெல்லத்தான் வேலை செய்யும்.

இது எண்ணெய் இல்லாத இனிப்பு வகை. எண்ணெய் இல்லாத உணவு வகைகளைக் கொண்டு வந்தால் நாம் நோயிலிருந்து தப்பிக்கலாம். வெள்ளை சர்க்கரை உடலுக்கு நல்லதல்ல. அதனால், வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு சர்க்கரை அல்லது தேன், கருப்பட்டி அதாவது பனைவெல்லம் பயன்படுத்தலாம்.

தேவைப்படும் பொருட்கள்:

• மில்லட்ஸ் பொடி 50 கிராம்

• பொடி செய்யப்பட்ட பாதாம் முந்திரி பருப்பு வகைகள் 100 கிராம்

• சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை 75 கிராம்

தண்ணீர் அரை டம்ளர் தட்டில் தடவ சிறிது நெய் தீயை மிதமாக வைத்து மில்லட்ஸ் மாவை முதலில் லேசாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை கம்பி பாகு பதம் காய்ச்சி இந்த மாவை முதலில் கொட்டி கிளற வேண்டும் கட்டி இல்லாமல் கிளறிய பின் முந்திரி பாதாம், பிஸ்தா கலந்த கலவையைக் கொட்டி உடனே இறக்கவும். துண்டுகளை நம் விருப்பம் போல போட்டுக் கொள்ளலாம், வைத்து அலங்கரிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நீங்கள் வெற்றிபெற யாருடன் போட்டி போடவேண்டும் தெரியுமா?
பாதாம்...

• சோளம்-புற்று நோயைத் தடுக்கும், கண் பார்வையைக் கூர்மை செய்யும்.

• மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, துத்தநாகம், விட்டமின் பி-நிறைந்த

• தினை-நீரிழிவு நோய் தடுக்கும்

• கேழ்வரகு-கால்சியம் அதிகம் இருப்பதால் மூட்டுவலி குணமாகும், எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும்.

• வரகு அரிசி-குடல்புண் ஆற்றும்

சிறுதானியங்களைப் பொடியாக்கும் முறை,

கடையில் சிறுதானியங்களை வாங்கிய பின் கழுவி நன்கு வெயிலில் உலர்த்தவேண்டும். மிஷினில் கொடுத்து பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். கழுவி காயவைத்த டப்பாவில் இந்த மாவைப் பதப்படுத்தி வைக்கலாம். வண்டுகள் வராமலிருக்க உப்புத் தூளைத் துணியில் கட்டிப் போடலாம். காய்ந்த வேப்பிலைகளைப் போட்டு வைக்கலாம். இந்த மாவில் தோசையும் வார்த்தெடுக்கலாம்.

முடக்கறுப்பான் கேழ்வரகு பாதாம் பருப்பு பக்கோடா!

· கேழ்வரகு மாவு-அரை தம்ளர் (100கிராம்)

· பாதாம்பருப்பு மாவு- அரை தம்ளர்(100 கிராம்)

· சின்ன வெங்காயம் உரித்து அறுத்தது-கால் தம்ளர்

· இஞ்சி,பூண்டு விழுது-சிறிதளவு

· உப்பு-ஒரு தேக்கரண்டி

· கறிவேப்பிலைப்பொடி- சிறிதளவு

· முடக்கறுப்பான் இலை-கால் தேக்கரண்டி

· மிளகாய்த்தூள்-தேவையாக இருந்தால் கால் தம்ளர் போடலாம்

· பிரியாணி மசால்-கால் தேக்கரண்டி

· எண்ணெய் அரை லிட்டர்

ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய் கொதிக்க வைத்து மாவில் ஊற்றிப் பிசைய வேண்டும். வடை பதம் மாவு வந்தவுடன் எண்ணெயைக் கொதிக்க வைத்து எண்ணெய் இலேசாக புகையைத் தொடங்கியவுடன் மாவை இலேசாக உதிர்த்து விட்டு போட்டு எடுக்கவும். தேவைப்பட்டால் பச்சரிசி மாவு சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

பாதாம் பக்கோடா
பாதாம் பக்கோடா

பயன்கள்

· முடக்கறுப்பான் இலை-எலும்பிற்கு வலு சேர்க்கும், முட்டிவலி வராமல் தடுக்கும்.

· கேழ்வரகு உடலுக்கு வலிமை தரக்கூடியது.

· பாதாம் பருப்பும் அளவுடன் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை தரும். இந்த பாதாம் பருப்பில் பலவகையான பலகாரங்கள் செய்யலாம். இதயத்திற்கு நன்மை தரக்கூடிய பாதாம்ப ருப்பினை அப்படியே உண்ணலாம்.

· கறிவேப்பிலை-கூந்தலின் வேர்ப்பகுதியை வலுவாக்கி நரைமுடி வராமல் தடுக்கச் செய்யும்.

·  இஞ்சி, பூண்டு-வாயுத்தொல்லையைத் தடுக்கும்.

அவல் பாதாம் பருப்பு கிரம்ப்ஸ்

·  பாதாம் பருப்பு அரைத்த பவுடர்- கால் தம்ளர்

· அவல்- கால் தம்ளர்

· வேகவைத்த காய்கறிகள் (கேரட், பட்டாணி, பட்டர் பீன்ஸ், டபுள் பீன்ஸ், உருளைக்கிழங்கு)

·  பிரெட் துண்டுகள் சிறிதளவு

·  தோசை மாவு- ஐந்து கரண்டி

· பொரித்தெடுக்க எண்ணெய்-அரை லிட்டர்

வேக வைத்த காய்கறிகளுடன் சிறிதளவு சீரகம், ஓமம் சேர்த்துப் பிசைய வேண்டும். இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரெட் துண்டுகள், பாதாம்பருப்பு பவுடர், அவல் போன்றவற்றை நன்றாகக் கலந்து தேவைப்படும் அளவு உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளலாம். வீட்டில் டிசைன் அச்சுகள் இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணெயைக் காய வைத்து தோசை மாவில் காய்கறி கலவையை முக்கி எடுத்து பொரித்தெடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
'ஜூஸ் கிளீன்ஸ்' என்றால் என்ன தெரியுமா?
பாதாம்...

பயன்கள்

·  கேரட்-கண்ணிற்கு நல்லது, புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் மிக்கது.

· முள்ளங்கி-சிறுநீரகத்திற்கு நல்லது.

· பட்டாணி, பட்டர்பீன்ஸ், டபுள்பீன்ஸ் - எலும்புகளை வலுப்படுத்தும், சீரண சக்தியை அதிகரிக்கும்.

· சீரகம், ஓமம்-சீரணத்திற்கு நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com