கேரளத்து ஸ்டைலில் சுவையான வட்டயப்பமும், சுள்ளென்ற சம்மந்தியும்!

Recipes...
Recipes...Image credit - youtube.com
Published on

குழந்தைகளுக்கு மாலை வேளையில் செய்து கொடுக்கக்கூடிய சத்தான வட்டயப்பமும், மிகக் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய காரசாரமான சம்மந்தியும் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் காணலாம்.

வட்டயப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1 கப்

துருவிய தேங்காய்-2 கப் 

வடித்த சாதம் -1/2 கப் 

சர்க்கரை-1 கப் 

உப்பு- தேவைக்கேற்ப 

தேங்காய் எண்ணெய்- தேவைகேற்ப 

செய்முறை:

முதலில் பச்சரிசியை  நன்கு கழுவி நான்கு முதல் ஐந்து மணி நேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும்

ஒரு கப் துருவிய தேங்காயை எடுத்து அரை கப் தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்து தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அரிசியை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு  அதனுடன் ஒரு கப் துருவிய தேங்காய் (தோலை நீக்கி விட வேண்டும்) ஒரு கப் சர்க்கரை, அரை கப் சாதம்,  உப்பு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அரைக்கும் போது மாவு சூடாக கூடாது. 

மாவை சிறிது நேரம் வைத்திருந்து சூடு ஆறியவுடன் ஒரு இட்லி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி நன்கு சூடாகியவுடன் ஒரு   தட்டில் சிறிதளவு தேங்காய் எண்ணையை நன்கு தடவி மாவை அதில் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். நன்கு வெந்து சூடு ஆறியவுடன் அதனை சிறிய கத்தி கொண்டு  பிடித்த வடிவங்களில் வெட்டி எடுத்தால் சுவையான வட்டியாப்பம் ரெடி!

இது குழந்தைகளுக்கு மிகவும் சத்து மிகுந்த உணவு. தேங்காய் அதிகமாக சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

குறிப்பு: இதில் ஏலக்காய் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏலக்காய் சேர்த்தால் ஏலக்காயின் வாசம்தான் வருமே தவிர  தேங்காய் பாலின் சுவையை அதிகமாக உணர முடியாது.

கேரள சம்மந்தி:

தேவையான பொருள்கள்:

 சின்ன வெங்காயம் -10 முதல் 20  

வர மிளகாய் -7 to 8

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு 

இஞ்சி-4 முதல் 5 துண்டுகள் 

தனி  மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 

துருவிய தேங்காய்-1 கப் 

சீரகம்-1 டேபிள்ஸ்பூன் 

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

தேங்காய் எண்ணெய்- தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
இறைவனாலும் கொடுக்க முடியாத வரம் எது தெரியுமா?
Recipes...

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு அதே வானொலியில் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

வதக்கியவை  நன்கு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை, இஞ்சி, மிளகாய் தூள், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

சாதம் மற்றும் தோசையுடன் வைத்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும் இந்தக் கேரளத்து சம்மந்தியின் சுவை. அவசர காலங்களில் சட்டென்று கைகொடுக்கக் கூடிய  ஒரு நல்ல ரெசிபி இது. ட்ரை பண்ணி பாருங்க!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com