இன்றைக்கு சுவையான மஞ்சள் பூசணி ப்ரை மற்றும் வேர்க்கடலை ஸ்வீட்டை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.
மஞ்சள் பூசணி ப்ரை செய்ய தேவையான பொருட்கள்.
மஞ்சள் பூசணி-1/2 கிலோ.
சோளமாவு-2 தேக்கரண்டி.
அரிசி மாவு-2 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
கரம்மசாலா-1 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
கருவேப்பிலை- சிறிதளவு.
மஞ்சள் பூசணி ப்ரை செய்முறை விளக்கம்.
முதலில் ½ கிலோ மஞ்சள் பூசணியை எடுத்து தோல் சீவிவிட்டு மெலிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் 2 தேக்கரண்டி சோளமாவு, 2 தேக்கரண்டி அரிசி மாவு, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், ½ தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி கரம்மசாலா கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசைந்து விட்டு காயைப் போட்டு பிரட்டி தட்டுப்போட்டு 1 மணி நேரம் மூடி வைக்கவும். இப்போது சிறிது தண்ணீர் தெளிந்து கலந்துவிட்டுக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் காயை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் ஒன்றாக போட்டு நன்றாக பொன்னிறமாக ப்ரை செய்து எடுக்கவும். கடைசியாக கருவேப்பிலை சிறிது ப்ரை செய்து இத்துடன் சேர்த்துக் கொள்ளவும். சுவையான மஞ்சள் பூசணி ப்ரை ரெடி. நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
வேர்க்கடலை ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள்.
வேர்க்கடலை-1கப்.
வெல்லம்-1கப்.
பால்-2கப்.
நெய்-1/4 கப்.
வேர்க்கடலை ஸ்வீட் செய்முறை விளக்கம்.
முதலில் ஒரு பவுலில் 1 கப் பச்சை வேர்க்கடலை தோலோடு சேர்த்துக்கொள்ளவும். இப்போது இதில் நன்றாக சுண்ட காய்ச்சிய கொதிக்கிற பால் 2 கப் சேர்த்துக்கொள்ளவும். இதை மூடிபோட்டு 15 நிமிடம் ஊறவிடவும். இப்போது இதை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் ¼ கப் நெய் விட்டு அரைத்த பேஸ்ட்டை அதில் சேர்த்துக் கொள்ளவும். இப்போது இதை கைவிடாமல் நன்றாக கிளறவும். கொஞ்ச நேரத்தில் சுண்டி வந்ததும் 1 கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். இப்போது நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். கடைசியாக 2 தேக்கரண்டி நெய்விட்டு கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கிவிடவும். செம டேஸ்டியான வேர்க்கடலை ஸ்வீட் தயார். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.