நாவூர வைக்கும் காஞ்சிபுரம் ஸ்பெஷல் சுண்டல் மற்றும் பொரிச்ச கிழங்கு கறி ரெசிபிஸை எப்படி வீட்டிலேயே செய்யலாம்னு பார்ப்போம்.
காஞ்சிபுரம் சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்.
எண்ணெய்-2 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
கருவேப்பிலை- சிறிதளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
புதினா-சிறிதளவு.
இடித்து சேர்த்துக் கொள்ள,
சோம்பு-1 தேக்கரண்டி.
இஞ்சி-1 துண்டு.
பச்சை மிளகாய்-1
பூண்டு-4
மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
பகோடா செய்ய,
வெங்காயம்-1
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
கடலைமாவு-2 தேக்கரண்டி.
அரிசிமாவு-2 தேக்கரண்டி.
உப்பு- சிறிதளவு.
பட்டாணி-1கப்.
அரிசி மாவு-1 தேக்கரண்டி.
கரம் மசாலா-1 தேக்கரண்டி.
எண்ணெய்- தேவையான அளவு.
காஞ்சிபுரம் சுண்டல் செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு சோம்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை கொத்தமல்லி, புதினா சிறிதளவு, சோம்பு 1 தேக்கரண்டி, இஞ்சி 1 துண்டு, பூண்டு 4, பச்சை மிளகாய் 1 இடித்து அதையும் சேர்த்துக் கொள்ளவும். இதில் சிறிது தண்ணீர் ஊற்றி பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது வெங்காயம் சிறிதாக வெட்டிக்கொண்டு அதில் கடலை மாவு 2 தேக்கரண்டி, அரிசி மாவு 2 தேக்கரண்டி சேர்த்து இத்துடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பிசைந்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். இதை செய்து வைத்திருக்கும் கலவையில் உதிர்த்து போடவும்.
இப்போது நன்றாக வேகவைத்த பட்டாணியை 1 கப் சேர்த்துக்கொள்ளவும். இப்போது அரிசி மாவு 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். சுண்டலை மந்தார இலையில் மடித்து பரிமாறவும். சுவையான காஞ்சிபுரம் பேமஸ் சுண்டல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
பொரிச்ச கிழங்கு கறி செய்ய தேவையான பொருட்கள்.
பாசிப்பருப்பு- ¼ தேக்கரண்டி.
உப்பு-சிறிதளவு.
மஞ்சள் தூள்- சிறிதளவு.
பேஸ்ட் செய்ய,
எண்ணெய்-2 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டிட்
உளுந்து-1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-1
துருவிய தேங்காய்-1 கப்.
கறி செய்வதற்கு,
எண்ணெய்- தேவையான அளவு.
கடுகு-1 தேக்கரண்டி.
சோம்பு-1 தேக்கரண்டி.
உளுந்து -1 தேக்கரண்டி.
வெங்காயம்-1
தக்காளி-1
கருவேப்பிலை- சிறிதளவு.
உருளை-2
மஞ்சள் தூள்- சிறிதளவு.
உப்பு-சிறிதளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
பொரிச்ச கிழங்கு கறி செய்முறை விளக்கம்.
முதலில் குக்கரில் ¼ கப் பாசிப்பருப்பு சேர்த்து அது மூழ்கும் வரை தண்ணீர்விட்டு சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மூடிவைத்து மூன்று விசில் விட்டு எடுத்து பருப்பை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு சோம்பு 1 தேக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 1 சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கியதும் மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, வெங்காயம் 1, தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கவும். கருவேப்பிலை சிறிதளவு, சிறிதாக நறுக்கிய வேகவைத்த உருளை 2, மஞ்சள் தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு 5 நிமிடம் நன்றாக வேகவைக்கவும்.
இப்போது வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்துவிட்டு அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். டேஸ்டியான பொரிச்ச கிழங்கு கறி தயார். இந்த சிம்பிள் ரெசிபியை நீங்களும் வீட்டிலேயே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.