
(பாக்கெட் மாவிலும் செய்யலாம்)
தேவையானவை:
வரகு, சாமை, குதிரைவாலி கேழ்வரகு மாவு தலா – 50 கி, பச்சரிசி மாவு - 250 கி, கருப்பட்டி – 500 கி, எள்ளு – 2 டேபிள்ஸ்பூன், சுக்குப் பொடி - ½ டீஸ்பூன், ஏலக்காய் பவுடர், பொரிக்க எண்ணெய். – தேவைக்கு, நெய் – தேவைக்கு.
செய்முறை:
1) மேற்கூரிய மாவு வகைகளை ஒன்றாக கலந்து, தண்ணீர் தெளித்து (ஈரப்பதம் இடித்த மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்). மிக்ஸியில் (கவனம்... அரைக்ககூடாது) சலித்து, அதில், ஏலப்பொடி, சுக்கு பொடியை போட்டு விரவவும்.
2) ஒரு பாத்திரத்தில் நூறு மில்லி நீர் ஊற்றி கருப்பட்டியை தட்டி போட்டு மிதமான தீயில் கரைய வைத்து பின்பு வடிகட்டி, அந்த பாத்திரத்தை நன்கு கழுவி, வடிகட்டி வைத்த கருப்பட்டி கரைசலை ஊற்றி, மிதமான தீயில் ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, மாவில் விட்டு கிளறி ஒரு மணி நேரம் ஊற்றியபின், நெய் தொட்டு தட்டி மிதமான தீயில் பொன்நிறமாக சுட்டெடுத்தால் சத்தான அதிரசம் ரெடி. இந்த மாவை அப்படியே வைத்திருந்து மறுநாள் செய்தால் இன்னும் மிருதுவாக இருக்கும்.
குறிப்பு: இதில் நான்கு வகை சிறு தானியங்கள் மேலும் கருப்பட்டியில் செய்திருப்பதால் இரும்புச்சத்து, கால்சியம், புரதம் பாஸ்பரஸ், கரோட்டின் நிறைந்த சத்தான ஒரு பட்சணம். மேலும், ஊறவைத்து, காயவைத்து, திரிக்க வேண்டிய அவசியமில்லை. பாக்கெட் மாவும் (ஏதோ ஒருவகை மாவிலும் செய்யலாம்) மற்ற பொருட்கள் இருந்தாலே போதும். ஒரு பக்கெட் அதிரசம்கூட அதிரடியாக அசத்திவிடலாம்.
டிப்ஸ்: பாகு முறுகிவிட்டால் பதற வேண்டாம். கால் தம்ளர் நீர் ஊற்றினால் மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடும். நமக்கு வேண்டிய பதத்தில் பயன்படுத்தலாம். இனிப்பு பலகாரத்திற்கு, சுக்கோ, எள்ளோ, கசகசாவோ பயன்படுத்தினால் இனிப்பு குறைவாக இருந்தாலும் அதிகபடுத்தி காட்டும். அதிகமாக இருந்தால் திகட்டாது.
தேவையானவை: சாமை, வரகு, குதிரை வாலி, பச்சரிசி மாவு தலா - ½ கப், கடலை மாவு - ¾ கப், பொரிகடலை மாவு - ¼,
(பொரிகடலை மாவைத்தவிர மற்றது எல்லாமே பாக்கெட் மாவு தான்.) வரமிளகாய் - 15, நாட்டுப்பூண்டு - (சற்று பெரியது) - 8, காயப்பொடி - ½ டீஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவைக்கு, பூண்டு வாசம் பிடிக்காதவர்கள் தவிர்க்கலாம், கறிவேப்பிலை தேவைக்கு
செய்முறை
1) ஒரு கடாயில் மிலல்லட் மாவை மட்டும் போட்டு சூடு படுத்தவும் (வறுக்கக்கூடாது). ஆறியதும் மற்ற மாவையும் கலந்து மாவு சல்வட்டையில் சலிக்கவும்.
2) வரமிளகாய், பூண்டு, சிறிது கல் உப்புச்சேர்த்து பேஸ்டுபோல் அரைத்து, மாவில் கலந்து சட்னி கரண்டி அளவிலா சூடான எண்ணெய் ஊற்றி, சப்பாதி மாவு பதத்தில் பிசையவும். லைட் ப்ரவுன் நிறத்தில் (மில்வட் மாவு என்பதாவ் பொன்நிறமாக வராது) பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: பூண்டு பிடிக்காதவர்கள் ஓமம் சேர்த்துக்கொள்ளலாம். காரத்திற்கு மிளகாய் பொடியைவிட பேஸ்ண் நல்ல சுவை தரும்.
- ஜானகி பரந்தாமன்