
தேவையானவை: சர்க்கரை - 40 கிராம், தண்ணீர் - 1 டீஸ்பூன், சாக்லேட் சிரப் - 20 ml, பிஸ்தா, பாதாம், முந்திரி - தலா 20 கிராம், வெண்ணெய் – 2 டீஸ்பூன், பேக்கிங் சோடா - 1 சிட்டிகை.
செய்முறை:
1) பிஸ்தா, பாதாம், முந்திரி பருப்புகளை பொடியாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.
2) அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரையைச் சேர்த்து 1 டீஸ்பூன் தண்ணீர் விட்டு சர்க்கரையை கேரமல் செய்ய வேண்டும்.
3) கேரமல் செய்த சர்க்கரையுடன் நறுக்கிய பருப்பு வகைகள், வெண்ணெய், பேக்கிங் சோடா மற்றும் சாக்லேட் சிரப் சேர்த்து 2 நிமிடம் நன்றாக கலந்து அடுப்பை அணைக்கவும்.
4) கையில் லேசாக வெண்ணெய தடவி சிறிய உருண்டைகளாக உருட்டினால் சுவையான சத்தான சாக்லேட் லட்டு ரெடி!
தேவையானவை: கருப்பு கவுனி அரிசி மாவு - 250 கிராம், வெண்ணெய் - 2 டீஸ்பூன், எள்ளு - ½ டீஸ்பூன், ஓமம் - ½ டீஸ்பூன், மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கவுனி அரிசி மாவுடன், எள்ளு, ஓமம், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். வெண்ணெய் சேர்த்துப் பிசிறி, சூடான தண்ணீரை சேர்த்து, முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, முறுக்கு அச்சில், மாவைப் போட்டு பிழிந்தால், சூடான சுவையான சத்தான கருப்பு கவுனி அரிசி முறுக்கு ரெடி!
- ஹேமா பாலாஜி