
தேவையானவை: கேழ்வரகு மாவு – 2 கப், கடலை மாவு - ½ கப், முந்திரி பருப்பு - ½ கப்(பவுடர்), ஏலக்காய் பொடி – சிறிதளவு, சர்க்கரை -1½ கப், நெய் – ¼ கப்.
செய்முறை:
மாவு வகைகளை வெறும் வாணலியில் (வாசம் வரும்வரை) லேசாக வறுக்கவும். வாணலியில் சர்க்கரையை போட்டு அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி கெட்டி பாகு வைக்கவும். வறுத்த மாவுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி தட்டாமல் நன்றாக கிளறவும். உறுக்கிய நெய் விட்டு, நன்றாக கிளறி, ஏலப்பொடி சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, சற்று ஆறியதும் துண்டுகளாக கட் செய்யவும். மிகவும் சுவையான ஆரோக்கியமான பர்ஃபி ரெடி சுலபமாக 20 நிமிடங்களில் செய்து விடலாம்.
தேவையானவை: ராகி பவுடர் - 3 கப், அரிசி மாவு - ¼ கப், சீரகம் - ½ ஸ்பூன், பொட்டுக் கடலை மாவு - ¼ கப், மிளகு தூள் - 1/3 ஸ்பூன், வெண்ணெய் - ½ கப், பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மாவு வகைகளை எல்லாம் ஒரு பேசவனில் போட்டு தேவையான உப்பு, மிளகு தூள், சீரகம், வெண்ணெய் போட்டு நன்கு கலந்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி. நன்கு காய்ந்தவுடன் ரிப்பன் அச்சில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பிழிந்து சிவக்க எடுக்கவும். மிக சுவையான ஆரோக்கியமான ரிப்பன்... பொறுமை பொறுத்து வென்று சுவை அள்ளும் இந்த தீபாவளி ராகி தீபாவளி!
- மாலதி நாராயணன்