
தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், பால் – ஒரு கப், நெய் மட்டுமே அல்லது ரீபைண்ட் ஆயிலும் சேர்த்து – ஒரு கப், சர்க்கரை - இரண்டரை கப், பொடித்த முந்திரி பாதாம் – அரை கப்.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் கடலை மாவை சூடு வரும்வரை வறுத்துக்கொள்ளவும். தேங்காயை துருவி ஈரம் போக வறுத்து லேசாக பொடித்துக்கொள்ளவும். காய்ச்சாத பாலை பாத்திரத்தில் ஊற்றவும். சர்க்கரையை சேர்க்கவும். தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி பாதாம், கடலை மாவை சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து, சுருண்டு வரும் பக்குவத்தில், நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். பின் துண்டுகள் போடவும். எளிதாகவும்,விரைவாகவும் செய்துவிடலாம் இந்த சுவையான, சத்தான மல்டி பர்பியை.
தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், ஓமம், சீரகம், உப்பு - தலா அரை ஸ்பூன், நெய், தனி மிளகாய் தூள் - தலா ஒரு ஸ்பூன், தேவையான எண்ணெய் – பொறிப்பதற்க்கு.
செய்முறை:
ஒரு கப் அரிசி மாவிற்க்கு ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் ஓமம், சீரகம், உப்பு ,நெய், மி.தூள் சேர்த்து, அரிசி மாவை தூவி கிளறவும். மாவை ஆறவைத்து, நன்றாக பிசைந்து, மெலிதாக உருட்டி, சிறு சிறு வட்டங்களாக செய்து, எண்ணெயில் பொறித்து எடுக்கவும். மாலைநேர காபிக்கு சரியான செட். (கலர் சேர்த்தால் பார்க்க அழகாக இருக்கும்)
- செண்பகம் பாண்டியன்