
தேவையானவை: சிவப்பு அவல் – 1 கப், வெல்லம் – ½ கப், தேங்காய் – ¼ கப், நெய் – 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் தூள்- தேவைக்கேற்ப.
செய்முறை: முதலில் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் ஒரு கப் சிவப்பு அவலை மொறு மொறு என வறுக்கவும். வறுத்த அவல் ஆறிய பிறகு மிக்செல் ரவா பதத்திற்கு உடைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ½ கப் வெல்லம் சேர்த்து, ½ கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். வெல்ல பாவு பிசு பிசு என வந்தவுடன் ¼ கப் தேங்காய் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மிக்ஸியில் அடித்த அவலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். கெட்டியான உடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து அடுபை ஆஃப் செய்யவும். கை பொறுக்கும் பதம் வந்தும் லட்டு பிடிக்கவும்.
தேவையானவை: கம்பு மாவு 1 கப், பொட்டுக்கடலை மாவு - ¼ கப், சீரகம் – 1 ஸ்பூன், பெருங்காயத்தூள், பட்டர், உப்பு........
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கம்பு மாவு, 1/4 கப் பொட்டுக்கடலை மாவு ஒரு ஸ்பூன் சீரகம் பெருங்காயத்தூள், உப்பு, பட்டர் சேர்த்து நன்கு கலந்துவிடவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் நன்கு பிசையவும். அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும்போது ஒரு முறுக்கு அச்சில் எண்ணெய் தடவி மாவை உள்ளை வைத்து, வாணலியில் பிழிந்து முறுக்கு வெந்தவுடன் எடுக்கவும்.
- வி.மஞ்சு