
தேவையானவை: ரவை - 1 கப், மைதா - 1 கப், ஜீனி - 1 கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, எண்ணெய் – தேவையானது.
செய்முறை: ரவை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊறவைக்கவும் . மைதா, ஜீனி, ஏலப்பொடி போட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, குழிக்கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் விடவும். வெந்ததும் திருப்பி விடவும். பொன் நிறமானதும் எடுக்கவும்.
தேவையானவை: அரிசி மாவு - 1 கப், வறுத்து அரைத்த உளுந்த மாவு - 2 தேக்கரண்டி. மல்லி, புதினா, பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி, வெல்ல தூள் - 1 தேக்கரண்டி, புளி கரைசல் - 1 தேக்கரண்டி, முளைகட்டிய பாசி ப்பயறு - 1 தேக்கரண்டி, நெய் - 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு
செய்முறை: அரிசி மாவை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். இதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். சிறிய உருண்டைகளாக உருட்டி ப்ளாஸ்டிக் சீட் நடுவில் வைத்து மெலிதாக தட்டவும். வாணலியில் எண்ணெய் வைத்து மெதுவான தீயில் பொரிக்கவும். வட இந்திய சுவையில் அசத்தும் தென் இந்திய பலகாரம் இது.
- அர்ச்சனா மீனாக்ஷி