
தேவையானவை: சத்துமாவு (ஹெல்த் மிக்ஸ்) - ஒரு கப், மைதா மாவு ¼ கப், நாட்டுச் சர்க்கரை - ¼ கப், முளைக்கட்டிய பாசிப்பயறு - 1டீ ஸ்பூன்.
செய்முறை: மேற்கண்ட பொருட்களை, சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசையவும். பெரிய உருண்டையாக உருட்டி, சப்பாத்திக்கல்லில் வைத்து கனமாக தேய்க்கவும். கத்தியால், டைமண்ட் ஷேப்பில் வில்லைகள் போடவும். வாணலியில் எண்ணெயை மிதமாக சூட்டில் வைத்து பொரிக்கவும். மொறு, மொறு என்று வாயில்
போட்டால் கரையும்.
தேவையானவை: இட்லி மாவு - ஒரு கப், பஜ்ஜி மிக்ஸ்- ¼ கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் - 1 பொடியாக அறிந்த கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக அரியவும். இட்லி மாவு, பஜ்ஜி மிக்ஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து, வடை மாவு பதத்திற்கு கலக்கவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொரிக்கவும். எளிதான முறையில் கார வடை தயார்.
- பழனிஸ்வரி தினகரன்