
தேவையானவை: சேமியா 1- கப், ஜீனி - ½ கப், பால் பவுடர் - 4 ஸ்பூன், சோள மாவு – 3 ஸ்பூன், மில்க் மெய்ட் – 2 ஸ்பூன், நட்ஸ், ட்ருட்டி ஃப்ருட்டி, செர்ரி – சிறிது, நெய் - 4 ஸ்பூன்.
செய்முறை: சேமியாவை சிறிது நெய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் ஒரு வாணலியில் சீனி சிறிது தண்ணீர் சேர்த்து அது கொதித்தவுடன் சேமியாவை சேர்க்கவும். 1 நிமிடம் கிளறவும். ஒரு கண்ணாடி பௌலில் ½ கப் சேர்த்து மேலே ஒரு கண்ணாடி பவுல் வைத்து அழுத்தம் கொடுக்கவும். சிறிது நேரம் கழித்து சேமியா நெஸ்ட்ஐ தனியாக எடுக்கவும். சோள மாவை ½ கிளாஸ் தண்ணீரில் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் பால் பவுடரைச் சேர்க்கவும். பின் மில்க் மெய்ட் சேர்த்து கிளறவும். பின் நெஸ்ட்இல் இந்தக் கலவையை பாதி நிரப்பி மேலே நட்ஸ், செர்ரி கொண்டு அலங்கரிக்கவும். பயன்கள்: புரத சத்து அதிகம் உள்ளது.
தேவையானவை: கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - ¼ கப், பெருங்காய பவுடர் - சிறிது மஞ்சள் தூள் - ½ ஸ்பூன், சில்லி பவுடர் - ½ ஸ்பூன், தக்காளி -2 (அரைத்து வடிகட்டி) வெண்ணெய் -1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: செய்முறை ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், மற்ற எல்லா பொடிகள் சேர்க்கவேண்டும். தக்காளி விழுது சேர்த்து கிளறி,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி இடியாப்ப குழலில் பிழிந்து எடுக்கவும். பயன்கள்: புரத சத்து மற்றும் சி வைட்டமின் நிறைந்த உணவு.
- லாவண்யா