
தேவையானவை:
(5 உருண்டைகளுக்கு) கேப்பை மாவு - 1 கப், நிலக்கடலை - 1 கப், மண்டை வெல்லம் - ½ கப் (அல்லது) நாட்டு சக்கரை (அல்லது) கருப்பட்டி, எள் (கருப்பு) - 1 ஸ்பூன்.
செய்முறை:
1. ஒரு கப் கேப்பை மாவை சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, புட்டுக்கு பிசைவதைப்போல் பிசைந்து, இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. நிலக்கடலையை தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.
3. எள்ளை வடை சட்டியில் மிதமான சூட்டில் பொறித்து எடுத்து, வைத்துக்கொள்ளவும்.
4. கேப்பை புட்டு தயாராகிவிட்ட பின்பு இட்லி சட்டியில் இருந்து எடுத்து அதனுடன் நிலக்கடலை, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, ஒன்றாக கலந்து மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு சுற்று சுற்றவும். பின்பு அதை ஒரு தட்டில் போட்டு சிறு சிறு உருண்டையாக பிடித்து வைக்கவும். ஒரு வாரம் வரை இது கெடாது.
தேவையானவை:
(5 போண்டாக்களுக்கு) இட்லி மாவு - 2 குழி கரண்டி, மைதா மாவு - 3 ஸ்பூன் பச்சை மிளகாய் – 3, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி, கறிவேப்பிலை - கைப்பிடி அளவு (பொடியாக நறுக்கியது), மிளகாய் தூள் – ½ ஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் ஒரு கிண்ணத்தில் இரண்டு குழிக் கரண்டி இட்லி மாவோடு மைதா மாவு, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து போண்டா பதத்தில் கரைத்துக்கொள்ளவும். இதை 5 நிமிடம் ஊற வைக்கவும்.
2. அடுப்பில் எண்ணெய் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்தவுடன், மிதமான தீயில் சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொறித்து எடுக்கவும். அதிவேகமான, மிகவும் எளிமையான, அதே சமயம் காரமான உடனடி போண்டா ரெடி.
- பவானி வெங்கட்ராமன்