தேவையானவை:
சோளமாவு -1½ கப், தினை மாவு -1 கப், கோதுமை மாவு-1 கப், பாசிப்பருப்பு – ½ கப், நாட்டுச் சர்க்கரை - ¾ கப், தேங்காய் துருவல் – ½ கப், அத்திப்பொடி-2 டீஸ்பூன், சர்க்கரை -1 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பை வேக வைத்து வடிகட்டிகொள்ளவும். நாட்டுச்சர்க்கரையை தூளாக்கி, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் கலந்துவைக்கவும். இதுவே பூரணம். சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சோளமாவு, கோதுமை மாவு, அத்திப்பொடி, எண்ணெய், கரைத்த சர்க்கரை சேர்த்து மாவாக பிசைந்துவைக்கவும். 20 நிமிடங்கள் வைத்திருந்து மாவை சிறிய பூரிகளாக இட்டு, நடுவில் பூரண உருண்டை வைத்து மூடி ஓரங்களை ஒட்டி சோமாஸ் வீல் கரண்டியால் ஓரத்தில் ஓட்டி எடுத்துவைக்கவும். மாவு முழுவதும் சோமாஸ்களாக செய்துகொண்டு சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். ஆற விட்டு டப்பாவில் வைக்கலாம். சுவையான, சத்தான தினை சோமாஸ் தயார்.
தேவையானவை:
வறுத்து பொடித்த பயத்தம் பருப்பு மாவு - 1 கப், வறுத்த மல்டி க்ரைய்ன் மாவு -2 கப், பொட்டுக்கடலை மாவு - ¾ கப், மிளகு – 1 டீஸ்பூன் (கரகரப்பாக பொடித்தது) வெண்ணெய் -2 டீஸ்பூன், உப்பு.- தேவைக்கு.
செய்முறை:
பயத்தம் பருப்பு மாவுடன் மல்டி க்ரைய்ன் மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பின் வெண்ணெய் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி நன்றாக மாவாக பிசைந்துக்கொள்ளவும். அடுப்பில் கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், மாவை காரா சேவ் அச்சில் போட்டு பிழிந்துவிடவும். நன்கு வெந்து பொன்னிறமானதும் எண்ணெய் வடிகட்டி தட்டில் வைக்கவும். சூடு ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும். சுவையான மல்டி க்ரைய்ன் காரா சேவ் சுவையில் அசத்தும்.
- மகாலக்ஷ்மி சுப்ரமணியன்