தினை முருங்கை இலை லட்டு & மிளகு வடை!

ஸ்வீட் காரம் பட்சணம் போட்டி பரிசு பெறும் ரெசிபிக்கள்!
Sweet Karam Batchanam Recipes 7
Sweet Karam Batchanam Recipes 7

மில்லட் முருங்கை இலை லட்டு!

தேவையானவை:

கம்பு மாவு - 1 கப், ராகி மாவு – 1 கப், கோதுமை மாவு-  1 கப், முருங்கை இலை - 1½  கைப்பிடி, நாட்டுச் சர்க்கரை - 2½ கப், பசு நெய் - ¼ கப், முந்திரி - 12 - 15, உப்பு - 1 சிட்டிகை, ருசிக்கு சர்க்கரை - 1 ஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

அலங்கரிக்க:

நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகள்

செய்முறை:

முருங்கை இலையை நன்கு சுத்தம் செய்துகொள்ளவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, 1 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு சூடானதும், முருங்கை இலையில், 1 ஸ்பூன் சர்க்கரை போட்டு நன்கு வதக்கவும். (சர்க்கரை சேர்ப்பதால் நிறம் மாறாது) அதே நெய்யில் முந்திரியை வறுத்துக்கொள்ளவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, வெறும் கடாயில், கம்பு மாவு, ராகி மாவு, கேழ்வரகு மாவை தனித்தனியாக வறுத்து பெரிய பௌலில் ஒன்றாக போட்டு, சூடு ஆறனதும் நன்கு கலக்கவும். பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் நாட்டுச் சர்க்கரை, உப்பு சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பாகு பதம் தேவையில்லை.கெட்டியானால்போதும். பிறகு இறக்கிவிடவும். நெய்யை மிதமான தீயில் வைத்து உருக்கிக்கொள்ளவும். கலந்த மாவில், வதக்கிய முருங்கை இலை, வெல்லக்கரைசலை விட்டு கட்டியில்லாமல் நன்கு கலந்ததும், முந்திரியை போட்டு,உருக்கிய நெய்யை சிறிது சிறிதாக விட்டு பொறுக்கும் சூட்டில் உருண்டையாக பிடிக்கவும். இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான, மில்லட், முருங்கை இலை லட்டு தயார்.

குறிப்பு:  இதே முறையில் மாவில், முருங்கை இலைக்கு பதில், வெறும் கடாயில் துருவிய தேங்காயை பொன்னிறமாக வறுத்துப் போட்டும் உருண்டையாக பிடிக்கலாம். முருங்கை இலை, நாட்டுச் சர்க்கரை, பசு நெய், சேர்த்துச் செய்வதால், மணமும், சுவையும் ஆரோக்கியமும், கூடும்.

இதையும் படியுங்கள்:
சோளம் தினை சோமாஸ் & மல்டி க்ரைய்ன் காரா சேவ்!
Sweet Karam Batchanam Recipes 7

மிளகு வடை!

தேவையானவை:

கருப்பு உளுந்து - 1 கப், (அ) முழு உளுந்து. உடைத்த மிளகு - 2 ஸ்பூன், அரிசி மாவு - 2 ஸ்பூன், சுக்குப்பொடி - ¼ ஸ்பூன், நெய் - 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - ருசிக்கு, எண்ணெய் - பொரிப்பதற்கு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

மிளகை ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும் (அ) இடித்துக்கொள்ளவும். உளுந்தை நன்கு சுத்தம்செய்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீர் சேர்க்காமல், சற்று கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்ததை பௌலில் போட்டு, மாவுடன், மிளகு தூள், சுக்குப்பொடி, பெருங்காயத்தூள், அரிசி மாவு, உப்பு, 1 ஸ்பூன் நெய் விட்டு, அனைத்தையும் நன்கு கலக்கவும். அடுப்பை ஹையில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், அடுப்பை சிறு தீயில் வைத்து, வாழை இலை(அ) பால் கவரில், எண்ணெய் தடவி, மாவை கொஞ்சமாக எடுத்து, கையில் தண்ணீர் தொட்டு,மெல்லியதாக தட்டி, நடுவில் ஓட்டை போட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஆறினதும் தட்டில் எடுக்கவும். இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான, மிளகு வடை தயார்.

குறிப்பு: இந்த வடை, நவராத்திரி ஸ்பெஷல் ஆகும். மேலும், ஆஞ்சநேயருக்கு இதை வடைமாலையாகவும் சாத்துவார்கள்.

அனைவரும் இதனை செய்துபார்த்து,*நவராத்திரி*யை மகிழ்ச்சியாககொண்டாடவும்.

- ஜெகதா நாராயணசாமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com