
தேவையானவை:
கற்றாழை மடல் - 2 பெரியது, கோதுமை மாவு - 1 கப், தண்ணீர் - 5 கப், நாட்டு சர்க்கரை - 1¼ கப், நெய் முந்திரி திராட்சை
செய்முறை:
1. கற்றாழையை சுத்தம் செய்து மிக்சியில் நன்றாக அரைத்துகொள்ளவும்.
2. கோதுமை மாவை தண்ணீரில் கட்டி படாமல் கரைத்துக்கொள்ளவும்.
3. இரண்டையும் ஒரு அடி கனமான வாணலியில் கலந்து அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும்.
4. மாவு வெந்து ஓரளவுக்கு இறுகும் சமயத்தில் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
5. கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு அல்வா பதம் வரும்வரை கைவிடாமல் கிளறவும்.
6. கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்க்கவும்.
குறிப்பு: நிறத்திற்கு நான் சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்திருக்கிறேன்.
தேவையானவை:
ராகி மாவு -1 கப், வெங்காயம் - 1 நறுக்கியது, கறிவேப்பிலை - 2 கொத்து, பச்சை மிளகாய் – 1, சோம்பு - 1 ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, இஞ்சி பூண்டு – தட்டியது, கொத்தமல்லி தழை – சிறிதளவு, தண்ணீர் – தேவைக்கேற்ப.
செய்முறை:
1. மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கொட்டி மாவை பிசைந்துக்கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் மாவை கொஞ்சங்கொஞ்சமாக போட்டு எடுக்கவும்.
- பிரியா ஜெயசந்திரன்