சமைக்க வேண்டாம் மென்று தின்றாலே பலன் தரும் மூன்று இலைகள்...!


Do not cook, just chew it and eat it...
Healthy tips
Published on

நாம் சமைக்கும் உணவுகளுக்கு நறுமணம் தரும் புதினா, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் பல ஆரோக்கியமான குணங்களை கொண்ட து. இவைகளை சமைக்கக் கூட வேண்டாம். அப்படியே மென்று சாப்பிட்டாலே பல நன்மைகள் கிடைக்கும்.

புதினா என்பது நமக்கு புத்துணர்வை கொடுக்கும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புதினாவை தினமும் எடுத்துகொண்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்வோம். ஒரு குறிப்பிட்ட அளவு என்று எதுவும் இல்லை.  நாம் குடிக்கும் டீ, சாலடில், சமைக்கும் ரெசிபிகளில் பயன்படுத்தலாம். புதினா என்றாலே அதன் மணம்தான் நம்மில் பலருக்கு நினைவில் தோன்றும். புதினாவில் மணம் மட்டுமில்லாமல் பல்வேறு சத்துகளும் நிறைந்துள்ளது.

வயிற்று பிரச்னைகளை தீர்க்கும். நமது ஜீரண மண்டலத்திற்கு ஓய்வை கொடுத்து, ஜிரண பிரச்னை களுக்கு தீர்வாக அமையும். இதை நம் வாயில் போட்டு மென்றால் நல்ல மணம் கொடுக்கும். வாய் துர்நாற்றத்தை குறைக்கும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்  உள்ளது. இது உடலை சேதத்திலிருந்து நம்மை காப்பற்றும். இதன் நல்ல மணம் நமது மூளையை தூண்டும். இதனால் நன்றாக யோசித்து செயலாற்றும் வேலை மூளையில் நடைபெறும்.

மையல் பயன்பாடுகளை தவிர கறிவேப்பிலை சில ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருக்கிறது. வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சிமற்றும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் இந்த இயற்கையான இலையில் நிறைந்துள்ளன. எனவே கறிவேப்பிலைகள் செரிமானத்திற்கு உதவுகிறது, கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை நம் உடலுக்கு அளிக்கிறது. கறிவேப்பிலையை எந்த உணவு வகையிலும் பயன்படுத்தலாம் என்பதோடு இதனை தண்ணீரில் நன்கு அலசிவிட்டு அப்படியே நேரடியாக மென்றும் சாப்பிடலாம். பெரியவர்கள் ஒரு நாளைக்கு 10 கறிவேப்பிலை இலைகளை சாப்பிடலாம். அதேபோல கறிவேப்பிலையை எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து காலை மாலை உபயோகிக்கலாம்.

கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவை சிறிய துண்டுகளாக உடைக்க உதவுகிறது, எனவே இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. அஜீரணம், குடல் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

கறிவேப்பிலை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. கறிவேப்பிலையிலுள்ள அல்கலாய்டுகள் சர்க்கரை, கொழுப்பு மற்றும் குடல் புற்றையும தடுக்கும், அல்சைமர் எனும் வயோதிகத்து நினைவாற்றல் நோயையும் தடுக்குமாம்.

இதையும் படியுங்கள்:
மைதா பரோட்டாவும், வெஜிடபிள் குருமாவும்!

Do not cook, just chew it and eat it...

கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை மென்று முழுங்கினாலும் சரி அல்லது வெறும் வயிற்றில் கொத்தமல்லி ஜூஸ் குடித்தாலும் சரி உடலில் நடக்கும் மாற்றம் காலையில் தினமும் 1 கிளாஸ் கொத்தமல்லி ஜூஸ் குடிப்பதால் செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கும். இந்த இலைகளுக்கு இயற்கையில் குளிர்ச்சி இருப்பதால் வயிறு குளிர்ச்சியடையும்.

கொத்தமல்லி தழையை கொஞ்சம் சாப்பிட்ட பிறகு மென்று சாப்பிட . அது புட் பாய்சன் தவிர்க்க உதவும் . கொத்தமல்லி இலையில் "டோடேசெனால்" என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இது உணவு ஃபுட் பாய்சானவதற்கு காரணமான "சால்மோநெல்ன்" என்ற கிருமியை கொன்று விடுகிறது என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

கொத்தமல்லியில் உள்ள ஆரோக்கியமான பண்புகள் இதயநோய் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த ஜூஸ் குடிப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயநோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com