காஷ்மீரின் ஸ்பெஷல் ‘பிங்க் டீ’ பற்றித் தெரியுமா?

Kashmiri Pink Tea
Kashmiri Pink TeaImage Credits: Soulful Palate

துவரை கிரீன் டீ உட்பட எத்தனையோ வகை டீயை குடித்திருப்போம். ஆனால் அது என்ன பிங்க் டீ? அதுவும் காஷ்மீர் ஸ்பெஷல்னா கண்டிப்பாக தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்தானே? சரி வாங்க, அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பிங்க் டீ காஷ்மீரில் பிரபலமானதாகும். இதற்கு காஷ்மீர் டீ, குலாபி டீ, ஷீர் டீ, பிங்க் டீ என்று பலவிதமான பெயர்கள் உண்டு. இதை தயாரிப்பதற்கு கிரீன் டீ, பால், பேக்கிங் சோடா, உப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை டீ பாகிஸ்தான், இந்தியா மற்றும் கரிபியன் நாடுகளில் பிரபலமாகும்.

இதை ‘நூன் டீ’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘நூன்’ என்னும் வார்த்தைக்கு இந்தோ ஆரியன் மொழியில் ‘உப்பு’ என்று பொருள். காஷ்மீரி ஹிந்துக்கள் இதை ‘ஷியர் சாய்’ என்று கூறுவார்கள். ‘ஷியர்’ என்பதற்கு பெர்ஷிய மொழியில் ‘பால்’ என்று அர்த்தம்.

பாரம்பரியமாக பிங்க் டீயை தயாரிக்கும் முறையானது, கிரீன் டீ, உப்பு, பால், பேக்கிங் சோடா ஆகியவற்றை பயன்படுத்தவேண்டும். முதலில் கிரீன் டீயுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து ஒரு மணி நேரம் கொதிக்க வைத்தால் பர்கண்டி நிறம் வரும். அதில் குளிர்ந்த நீரை சேர்க்கும் போது பர்கண்டி நிறம் தங்கி விடும். அதில் பாலை சேர்த்தால் பர்கண்டி நிறம் மாறி பிங்க் நிற டீ தயாராகி விடும். இதற்கு சர்க்கரையை பயன்படுத்த மாட்டார்கள். எனினும் தற்போது சர்க்கரையை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் உப்பு சேர்ப்பதை தவிர்த்து விடுகிறார்கள். மேலும் பிங்க் டீயில் நட்ஸ் தூவி பரிமாறப்படுகிறது.

இந்த பிங்க் டீ சீனாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. நூன் சாய் ஹிமாலயத்திலே உருவானதாகும். டீயிலே உப்பு சேர்ப்பதற்கான காரணம் மலைப் பிரேதேசங்களில் உடலிலிருந்து சீக்கிரம் தண்ணீர் இழப்பை சரி செய்வதற்காகவேயாகும். இந்த டீயை காஷ்மீரில் பலமுறை குடிப்பார்கள். இதை குல்சா போன்ற பிரட்களுடன் சேர்த்து பரிமாறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
திருவான்மியூர் மசாலா மோர் ரெசிபி செய்யலாம் வாங்க!
Kashmiri Pink Tea

பிங்க் டீ அருந்துவதால், நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இதில் மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் உள்ளதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் அமினோ ஆசிடான எல்-தியானைன் (L-theanine) உள்ளதால் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கிறது.

பிங்க் டீ பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமில்லாமல் சுவையும் கிரீமியாகவும், இனிப்பாகவும் இருக்கும். எனவே காஷ்மீரில் கண்டிப்பாக இந்த டீயை வாங்கி சுவைத்து பார்த்து விட வேண்டியது அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com