கொளுத்துகிற வெயிலுக்கு நல்ல கெட்டியான தயிர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதாகும். தயிர் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பற்களையும், எலும்புகளையும் வலுப்படுத்தும், சருமத்தை பளபளப்பாக்கும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும், உடல் எடை குறைக்க உதவுகிறது. இத்தகைய பயன்களை கொண்ட மோரை வைத்து இன்னைக்கு ஒரு பானம் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்;
தயிர்-1கப்
சிறிதாக வெட்டிய மாங்காய்-1கப்.
இஞ்சி-1துண்டு.
பச்சை மிளகாய்-1
கொத்தமல்லி- சிறிதளவு.
கல்உப்பு- தேவையானஅளவு.
காராமணி-1கப்.
ஐஸ்கட்டி-தேவையான அளவு.
செய்முறை விளக்கம்;
முதலில் கட்டியான தயிரை மிக்ஸியில் போட்டு அத்துடன் கழுவி வெட்டி வைத்த இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 1, கொத்தமல்லி சிறிதளவு, சிறிதாக வெட்டி வைத்த மாங்காய் கொஞ்சம் சேர்த்து கல் உப்பு தேவையான அளவு தண்ணீர் 2 கப் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி விடவும். இதில் தேவையான அளவு ஐஸ் சேர்த்து நன்றாக கலக்கி விட்ட பிறகு ஒரு கிளேஸ் டம்ளரில் மாங்காய் துண்டுகள் சிறிது சேர்த்து அரைத்து வைத்திருக்கும் மோரை ஊற்றி மேலே காராமணியை தூவி பரிமாறவும். இப்போது சுவையான திருவான்மியூர் மசாலா மோர் தயார். நீங்களும் வீட்டில் ஒருமுறை முயற்சி செஞ்சி பார்த்துட்டு சொல்லுங்க.
தேங்காய்ப் பால் பனைவெல்லம் பானம்!
தேங்காய்ப் பாலில் நிறைய சத்துக்கள் உள்ளது. இது சருமத்தை பளபளப்பாக்குவது மட்டுமில்லாமல் கரும்புள்ளிகளை நீக்கும். உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். அஜீரண பிரச்னை உள்ளவர்கள் தேங்காய் பாலை எடுத்துக்கொண்டால் சீக்கிரமே அந்த பிரச்னை தீரும். இத்தகைய பலன்களை கொண்ட தேங்காய் பாலை வைத்து ஒரு ஜூஸ் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்;
தேங்காய்-1கப்.
பனவெல்லம்-1/2 கப்.
சுக்கு பொடி-1/4 தேக்கரண்டி.
ஐஸ்கட்டி- தேவையான அளவு.
பாதாம் பிசின்-2 தேக்கரண்டி.
செய்முறை விளக்கம்;
முதலில் மிக்ஸியில் நன்றாக துருவிய தேங்காயை 1கப் சேர்த்து கொள்ளவும். அத்துடன் பனைவெல்லம் ½ கப்பை சேர்க்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ¼ தேக்கரண்டி சுக்கு பொடி சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த கலவையை நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 2 தேக்கரண்டி ஊற வைத்த பாதாம் பிசினை ஒரு கிளேஸ் டம்ளரில் சேர்த்து அதில் இந்த ஜூஸை ஊற்றி தேவையான அளவு ஐஸ் சேர்த்து கலக்கி பரிமாறவும். சூப்பர் டேஸ்டாக இருக்கும் நீங்களும் வீட்டிலே செஞ்சி பார்த்துட்டு சொல்லுங்க.