தென் கொரியாவின் பிரபலமான சாலை உணவு தொக்போக்கி (tteokbokki) பற்றி தெரியுமா?

tteokbokki korean food...
tteokbokki korean food...drivemehungry.com

கொரியாவில் மிகவும் பிரபலமான சாலை உணவுகளில் தொக்போக்கியும் ஒன்றாகும். வெறும் அரிசி மாவினால் செய்யப்பட்ட கேக்கினை, இனிப்பும் காரமும் கலந்த சாஸ்ஸில் சேர்த்து ப்ரை செய்து பரிமாறுவதாகும். இது தென்கொரியர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு வகையாகும்.

தொக்பொக்கியை சுலபமாக நமது வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு- 2 கப்.

உப்பு- தேவையான அளவு.

தண்ணீர்- தேவையான அளவு.

எண்ணைய்- தேவைவையான அளவு.

வெள்ளை எள்- 2 தேக்கரண்டி.

பொடியாக வெட்டிய பூண்டு- 5.

பொடியாக வெட்டிய இஞ்சி- சிறு துண்டு.

வெங்காயம்- ½ கப்.

பொடியாக வெட்டப்பட்ட பச்சை மிளகாய் -1

கேப்ஸிகம் – 1 கப்.

ரெட் சில்லி சாஸ் – 2 தேக்கரண்டி.

தக்காளி கெச்சப்-2 தேக்கரண்டி.

சோயா சாஸ்-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மிளகு தூள்-1/2 தேக்கரண்டி.

வினிகர்-1/2 தேக்கரண்டி.

ஜீனி- 1 தேக்கரண்டி.

செய்முறை:

முதலில் 2 கப் அரிசி மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

மாவை சிறிது சிறிதாக எடுத்து கொண்டு நீட்டமாக உருட்டவும். இப்போது அதை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதை கொதிக்க விடவும். நன்றாக கொதித்த தண்ணீரில் வெட்டி வைத்த மாவை சேர்க்கவும். 15 நிமிடம் மாவை நன்றாக வேக விடவும். மாவு வேகும் வரை கிளற வேண்டாம்.

நன்றாக வெந்த பின்பு அதை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு விடவும்.

இப்போது ஒரு காடாயை எடுத்து அதில் எண்ணை 2 தேக்கரண்டி சேர்த்து அதில் வெள்ளை எள் இரண்டு தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி வெங்காயம், பச்சை மிளகாய், கேப்ஸிகம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கிண்டவும்.

இதையும் படியுங்கள்:
மலபார் கீரையின் மலைக்க வைக்கும் நன்மைகள்!
tteokbokki korean food...

இப்போது அந்த கலவையில்1/2 கப் தண்ணீர் சேர்த்து அதில் ரெட் சில்லி சாஸ் 2 தேக்கரண்டி, தக்காளி கெச்சப் 2 தேக்கரண்டி, சோயா சாஸ் ஒரு தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மிளகு ½ தேக்கரண்டி, வினிகர் ½ தேக்கரண்டி, ஜீனி ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவை நன்றாக கொதித்த பிறகு ஏற்கனவே அரிசிமாவில் செய்து வைத்த சின்ன சின்ன கேக் துண்டுகளை இத்துடன் சேர்த்து கிளறவும்.

இப்போது சுவையான தொக்பொக்கி ரெடி. இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால், எடை விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் தென் கொரியர்களுக்கு இது ஒரு ஃபேவரைட் உணவாக இன்று வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com