நீங்கள் தினமும் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டில் எத்தனை வகைகள் உள்ளன தெரியுமா?

Different types of chocolates
Different types of chocolates in the worldImage Credits: Freepik

சாக்லேட், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியது. சாக்லேட்டை காபி, ஐஸ்கிரீம், கேக் என்று எதனுடன்  சேர்த்து சாப்பிட்டாலும் சலித்துப் போவதில்லை. அத்தகைய சாக்லேட்டில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் காண உள்ளோம்.

மில்க் சாக்லேட் (Milk chocolate)

மில்க் சாக்லேட் மிகவும் பிரபலமான சாக்லேட் வகையாகும். இதில் 10 முதல் 40% கொக்கோ, சக்கரை, பால் ஆகியவற்றுடன் கலந்து இருக்கிறது. டார்க் சாக்லேட்டை ஒப்பிடுகையில் மில்க் சாக்லேட் மிகவும் இனிப்பாக இருக்கும். எனினும் மில்க் சாக்லேட்டை பேக்கிங்கில் பயன்படுத்த மாட்டார்கள்.

ஒயிட் சாக்லேட் (White chocolate)

ஒயிட் சாக்லேட்டில் எந்த விதமான கொக்கோவும் சேர்க்கப் படுவதில்லை. அதற்கு பதில் கொக்கோ பட்டர் சேர்க்கப் படுகிறது. இதற்கு சாக்லேட் சுவையில்லை என்றாலும் வெண்ணிலா சுவையுண்டு. ஒயிட் சாக்லேட்டில் 20% கொக்கோ பட்டர், 55% சக்கரை, 15% பால் கட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

டார்க் சாக்லேட் (Dark chocolate)

டார்க் சாக்லேட்டில் சாக்லேட், கொக்கோ, சக்கரை ஆகியவை உள்ளது. இதில் எந்த பால் கட்டிகளும் பயன்படுத்துவதில்லை. டார்க் சாக்லேட்டில் கொக்கோ 30% முதல் 80% வரை சேர்க்கப்படுகிறது. இந்த வகை சாக்லேட்களை பேக்கிங்கிற்கு பயன்படுத்துவார்கள்.

செமி ஸ்வீட் சாக்லேட் (Semi sweet chocolate)

செமி ஸ்வீட் சாக்லேட்டில் 35% கொக்கோ பயன்படுத்தப் படுகிறது. இந்த வகை சாக்லேட்டை பேக்கிங்கிற்கு பயன்படுத்துகிறார்கள்.

பிட்டர் ஸ்வீட் சாக்லேட் (Bitter sweet chocolate)

பிட்டர் ஸ்வீட் சாக்லேட்டில் 50 முதல் 80% கொக்கோ பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை சாக்லேட்களில் மற்ற சாக்லேட்களை விட கசப்புத்தன்மை சற்று அதிகமாக இருக்கும்.

பேக்கிங் சாக்லேட் (paking chocolate)

பேக்கிங் சாக்லேட் என்பது சுத்தமான சாக்லேட் ஆகும். இதில் கொக்கோ பீன்ஸ் பயன்படுத்தி செய்யப்பட்ட சுத்தமான சாக்லேட் மட்டுமே உள்ளது. இதை பேக்கிங்கிற்கு பயன்படுத்தும்போது சாக்லேட்டின் சுவையை கொடுக்கும். ஆனால் தனியாக சாப்பிடுவதற்கு சிறந்ததில்லை.

கொக்கோ பவுடர் (Cocoa powder)

கொக்கோ பவுடரில் 100% கொக்கோ மட்டுமே உள்ளது. இதில் சக்கரை கிடையாது. கொக்கோ பட்டர் இதிலிருந்தே எடுக்கப்படுகிறது. இதையும் பல ரெசிபிகளில் பயன்படுத்துவார்கள். சாக்லேட்களை உருகாமல் இந்த பவுடரை பல மாவுகளுடன் பவுடர் வடிவில் சேர்த்துக் கொள்ள பயன்படுகிறது.

ஸ்வீட் ஜெர்மன் சாக்லேட் (Sweet German chocolate)

ஸ்வீட் ஜெர்மன் சாக்லேட் என்பது டார்க் பேக்கிங் சாக்லேட் ஆகும். இதை ‘சாமுவேல் ஜெர்மன்’ என்பவரே உருவாக்கினார். இதை பேக்கிங் செய்வதற்கு ஏற்றார்ப்போல இதிலேயே சக்கரை சேர்க்கப் பட்டுள்ளதால் சாதாரண சாக்லேட்டை விட அதிக இனிப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அல்டிமேட் டேஸ்டில் ராஜஸ்தானி கட்டா கிரேவி-பன்னீர் புர்ஜ் செய்யலாம் வாங்க!
Different types of chocolates

கவெர்சூர் சாக்லேட் (Couverture chocolate)

இந்த வகை சாக்லேட்டில் அதிக சதவீதத்தில் கொக்கோ பட்டர் உள்ளதால் விலையும் அதிகம். இதில் அதிக பட்டர் உள்ளதால் விரைவாக உருகிவிடும் தன்மையை கொண்டது, சுலபமாக சாக்லேட் கேன்டீஸ் செய்லாம்.

ரூபி சாக்லேட் (Ruby chocolate)

சீனாவில் செப்டம்பர் 2017ல் ரூபி சாக்லேட் உருவாக்கப் பட்டது. இந்த சாக்லேட்டை ரூபி கொக்கோ பீன்ஸை பயன்படுத்தி தயாரிக்கிறார்கள். இவை Equator, brazil போன்ற இடங்களில் விளைகிறது. இந்த பீன்ஸ் சாக்லேட்டிற்கு இயற்கையாகவே ரோஸ் நிறத்தை கொடுக்கிறது. இதில் பெர்ரி சேர்க்கப்படாத போதும், சாக்லேட்டுடன் பெர்ரியை சேர்த்தது போன்ற சுவையை கொடுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com