அல்டிமேட் டேஸ்டில் ராஜஸ்தானி கட்டா கிரேவி-பன்னீர் புர்ஜ் செய்யலாம் வாங்க!

Rajasthani Gatte gravy
Rajasthani Gatte gravy and paneer burjji recipesImage Credits: Archana's Kitchen

ன்றைக்கு ராஜஸ்தானில் மிகவும் பிரபலமான கட்டா கிரேவி மற்றும் சப்பாத்திக்கான சைட் டிஷ் பன்னீர் புர்ஜ் ஆகியவற்றை எப்படி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்னு பார்க்க போறோம் வாங்க.

கட்டா கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:

மாவு செய்வதற்கு,

கடலை மாவு- 1 கப்.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

நெய்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

சோம்பு-1 தேக்கரண்டி.

ஓமம்-1 தேக்கரண்டி.

கிரேவி செய்வதற்கு,

சோம்பு-1 தேக்கரண்டி.

ஜீரகம்-1 தேக்கரண்டி.

வரமிளகாய்-4

வெங்காயம்-2

பூண்டு-4

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

தனியா தூள்-1 தேக்கரண்டி.

தயிர்-1 கப்.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

தக்காளி-2

கொத்தமல்லி-சிறிதளவு.

எண்ணெய்- தேவையன அளவு.

உப்பு- தேவையான அளவு.

கட்டா கிரேவி செய்முறை விளக்கம்;

முதலில் பாத்திரத்தில் கடலை மாவு 1கப் சேர்த்து அதில் மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையாற அளவு, நெய் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, ஓமம் 1 தேக்கரண்டி சேர்த்து பிசைந்து விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இப்போது நன்றாக நீளமாக உருட்டி அதை சுடுத்தண்ணீரில் வேக வைத்து குட்டி குட்டியாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு 1 தேக்கரண்டி, ஜீரகம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் 2, பொடியாக நறுக்கிய பூண்டு 4, மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, அரைத்த தக்காளி 2 சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும். இப்போது அதில் தயிர் 1கப், கரம் மசாலா 1 தேக்கரண்டி நன்றாக கிண்டியதும் கடைசியாக தண்ணீர் சேர்த்து கிரேவி கொதிக்க ஆரம்பித்ததம் முதலில் செய்து வைத்திருந்த வேக வைத்த மாவை இதில் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கட்டா கிரேவி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ஒருமுறை டிரை பண்ணி பாருங்கள்.

பன்னீர் புர்ஜ் செய்ய தேவையான பொருட்கள்;

எண்ணெய்-1 தேக்கரண்டி.

ஜீரகம்-1தேக்கரண்டி.

சோம்பு-1/2 தேக்கரண்டி.

பன்னீர்-200 கிராம்.

வெங்காயம்-2

பச்சை மிளகாய்-2

குடைமிளகாய்-1

இஞ்சி -1துண்டு.

பூண்டு-3

தக்காளி -1

உப்பு- தேவையான அளவு.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

ஜீரகத்தூள்-1 தேக்கரண்டி.

தனியாதூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1/4 தேக்கரண்டி.

லெமன்-1/2 மூடி.

கொத்தமல்லி-சிறிதளவு.

இதையும் படியுங்கள்:
சூப்பரான சுவையில் மராத்தி ஸ்பெஷல் ஹரீரா-பிரெட் மில்க் கேக் செய்யலாம் வாங்க!
Rajasthani Gatte gravy

பன்னீர் புர்ஜ் செய்முறை விளக்கம்:

முதலில் கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அதில் ஜீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு ½ தேக்கரண்டி, வெங்காயம் 2, பச்சை மிளகாய் 2, குடை மிளகாய் 1, இஞ்சி 1 துண்டு, நசுக்கிய பூண்டு 3, நறுக்கிய தக்காளி 1, உப்பு தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது இதில் மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மிளகாய் தூள் 2 தேக்கரண்டி, ஜீரகத்தூள் 1 தேக்கரண்டி, தனியா தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் அளவு கிண்டிவிட்டு அதில் உதிர்த்த பன்னீர் 200 கிராமை சேர்த்து கிண்டவும். இப்போது கரம் மசாலா ¼ தேக்கரண்டி, லெமன் ½ மூடி சேர்த்து நன்றாக கிண்டி கொத்தமல்லி சிறிது தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பன்னீர் புர்ஜ் தயார். இதை சப்பாத்தியோடு வைத்து சாப்பிட்டால் அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் வீட்டிலே இந்த ரெசிபியை ஒருமுறை டிரை பண்ணி பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com