
நவீன காலத்தில் அனைவரும் அவசரம் காரணமாக குக்கர்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். சாதம் வடிக்கவோ, பருப்பு வேகவோ குறைந்தது சட்டியில் அரை மணி நேரம் எடுத்து கொள்ளும். தற்போது இந்த பிரஷர் குக்கர் உதவியால் அனைத்துமே 1 மணி நேரத்திற்குள் முடிவடைந்து விடுவதால் அனைவரும் அதை தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அந்த குக்கர் பிரச்சனை செய்தாலும், பலரும் வேலை பார்த்து உபயோகித்து வருகின்றனர். அது பல வருடங்களாக கூட உபயோத்து வருவதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அதாவது, குக்கரால் ஒருவர் உடல்நலபாதிப்பு அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் கடுமையான உடல்வலி, சோர்வு மற்றும் ஞாபக மறதி ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு ஈய நச்சுத்தன்மை (Lead Poison) இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் நடத்திய விசாரணையில் அவரது மனைவி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே அலுமினிய குக்கரை பயன்படுத்தியது தெரியவந்தது.
பழைய மற்றும் சேதமடைந்த அலுமினிய குக்கரில் அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சமைக்கும் பொழுது ஈயம் மற்றும் அலுமினிய துகள்கள் உணவில் கலந்து இந்த பிரச்சனையை ஏற்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டது.
இது மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. ஏனென்றால் நமது வீடுகளிலுமே வருடக்கணக்கில் குக்கர்களை உபயோகித்து வருகிறார்கள் என்பது தான். பெரும்பாலான பிரஷர் குக்கர்கள் அலுமினியம் அல்லது துருப்பிடிக்காத எஃகு (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அலுமினியம் என்பது உணவுடன் வினை புரியக்கூடிய ஒரு உலோகமாகும். சில ஆய்வுகளின் படி அதிக அமிலத்தன்மை கொண்ட உணவுகளான தக்காளி, புளி சார்ந்த உணவுகளை அலுமினிய குக்கரில் சமைக்கும் பொழுது சிறிதளவு அலுமினியம் உணவில் கலக்கப்படும். இதன் காரணமாக புற்றுநோய், அல்சைமர் நோய் ஏற்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இதை உறுதிப்படுத்தும் அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை. நமது அன்றாட உணவுகள், குடிநீர் மற்றும் சில மருந்துகள் மூலமாக நாம் தினமும் அலுமினியத்தை உட்கொள்கிறோம். உடலால் இந்த அலுமினியம் பெரும்பாலும் வெளியேற்றப்பட்டு விடுகிறது.
குக்கர் வயது:
ஒரு குக்கரை வாங்கினால் குறைந்தது 5-10 வருடங்கள் வரை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதன் பிறகு அடுப்பில் வைத்தால் தீயின் வேகத்தால் அந்த இரும்பு துகள்கள் வெளியாக தொடங்கிவிடுமாம். நீங்களும் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே குக்கரை பயன்படுத்தி வந்தால் உடனே கவனித்தில் கொண்டு அதை மாற்றி விடுங்கள். இதன் மூலம் பெரிய பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம் அல்லது அலுமினியம் குக்கர்களை தவிர்த்து விட்டு ஸ்டெயிலஸ் ஸ்டீலால் ஆன குக்கர்களை பயன்படுத்துவது நல்லது என கூறப்படுகிறது.