பாப்கார்னை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தியேட்டரோ, பார்க்கோ எங்கு சென்றாலும் நம் அனைவருக்கும் விருப்பமானது பாப்கார்ன் மட்டுமே. அதை எளிதாக செய்ய சில ஆலோசனைகள்.
வழக்கமான கார்னை சூடான வாணலியிலோ, குக்கரிலோ மூடி போட்டு வைத்து சூடாக்க சிறிது நேரத்தில் பாப்கார்ன் பொரிந்து அழகாக வந்திருக்கும்.
இதை சீஸ் பாப்கார்ன் ஆக தயாரிக்க, பாப்கார்ன் பொரிந்து சூடாக இருக்கும்போதே சீஸ், உப்பு, கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான சீஸ் பாப்கார்ன் எளிதில் தயார் செய்து விடலாம்.
ஸ்வீட் பாப்கார்ன் செய்ய சர்க்கரை சிரப்பை பாகு பதமாக்கிக் கொண்டு அதில் எசென்ஸ் சில துளிகள் சேர்த்து பாப்கார்ன் ஐ கலந்து இறக்கவும். கிரிஸ்பான ஸ்வீட் பாப்கார்ன் குழந்தைகளை கவரும்.
கிரீன் பாப்கார்ன் வேண்டுமா? புதினா அல்லது கொத்தமல்லியுடன் உப்பு, பச்சை மிளகாய் 1சேர்த்து அரைத்து சூடான பாப்கார்ன் ல் சேர்த்து, வாணலியில் எண்ணெய்விட்டு அது சூடானதும் இந்த பாப்கார்ன் ஐ கலந்து இறக்க கிரீன் பாப்கார்ன் சுவையில் அசத்தும். தேவையெனில் எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து இறக்கவும்.
கார்லிக் பாப்கார்ன்
பூண்டை உப்பு சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அதில் பூண்டை போட்டு, உப்பு சேர்த்துக் கலக்கவும். உப்பு, கார்லிக் சாஸ், எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து பாப்கார்னை போட்டு கலந்து இறக்கவும்.
சிட்ரிக் பாப்கார்ன்
எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, உப்பு, மிளகு சேர்த்து பொடிக்கவும். இதை பாப்கார்ன் மீது அப்படியே தூவி வெண்ணெய் அல்லது சீஸ் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சாக்லேட் பாப்கார்ன்
சாக்லேட் சிப்ஸ் ஐ உருக்கி அது உருகியதும் வெண்ணெய் சிறிது சேர்த்து பின் பாப்கார்னை சேர்த்து கலந்து கிரிஸ்பானதும் இறக்கவும்.
இதேபோல் சாட் மசாலா, கறிவேப்பிலை பொடி, இட்லி மிளகாய் பொடி என தூவி வெரைட்டியாக பாப்கார்ன் தயாரிக்கலாம். வீட்டிலேயே எளிதாக பாப்கார்ன் செய்து கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சி யாக்குங்கள். பண்டிகையை பாப்கார்னோடு கொண்டாடுவோம்.